அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு சென்று அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஏனைய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் ; மூன்று பேர் வெட்டிக்கொலை | Tension Hambantota Three People Were Hacked Death

உயிரிழந்தவர்கள் 29 முதல் 45 வயதுக்குட்பட்ட எலேகொட மற்றும் மாமடல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போதைய விசாரணையில், இறந்தவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *