கம்பஹா (Gampaha) பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எனினும், குறித்த லொறியில் பயணித்த இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்கு ஓடியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.