யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து யாழில் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதாவதற்கு வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா கைது ; ஊகத்தை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் | Douglas Arrested Sumanthiran Expresses Speculation

கிழக்கில் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதாகி மூன்று மாதங்களிற்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் பிள்ளையான் தனது முன்னைய எஜமான்களை சிக்க வைக்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக அனுர அரசு ஆதரவு ஊடகங்கள் பரபரப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

1996ம் ஆண்டு முதல் வடமராட்சி கிழக்கின் கரையோர கிராமங்களை இலக்கு வைத்து பாரிய மணல் கொள்ளை மகேஸ்வரி நிதியத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வளர்ப்பு நாயால் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் கைது

பாரிய மணல் மோசடியில் மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த டக்ளஸ் தேவானந்தா பின்னணியில் இருந்திருந்தார்.

இந்நிலையில் நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு துறைக்கு அனுர திசநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்துள்ள நிலையில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *