பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

மேலதிக விசாரணை

புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கிழக்கு பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி | Father Who Went To Call His Daughter From Jaffna

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் வந்த மகளை அழைத்துச் செல்வதற்காக, உயிரிழந்த நபர் அதிகாலையில் பலாலியில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் மோட்டார் சைக்களில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *