மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார்.

31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் திடீரென உயிரிழந்த தாய்; நிர்கதியான குழந்தைகள் | Mother Died Suddenly In Jaffna Destitute Children

குறித்த தாய் மகளை கல்வி நிலையத்திற்கு, நடந்து கூட்டிச் சென்றுகொண்டிருந்துள்ளார். இதன்போது பின்னால் வந்த மகேந்திரா வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் சாரதி முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்ன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் குழந்தைகளின் நாளாந்த வாழ்க்கையில் நஞ்சி கலந்த பாதகன் இப்படியான வேலையை எவரும் மறந்தும் கூட செய்ய வேண்டாம்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *