யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார். அரச உத்தியோகத்தரான அவர் அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வீதியில் நின்ற வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை மறித்து மது போதையில் செல்வதாகக் கூறி சோதிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர் என்றும் அதற்கு தாம் மறுப்பு தெரிவித்த போது தாக்க முற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2005.04.04 அன்று பிற்பகல் அலுவலக பணி முடித்து பால்மா பேணி ஒன்றையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றேன்.

யாழ். பொலிஸாரிடமிருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை | Request To Protect The Public From Jaffna Police

இதன்போது மாலை 6.50 மணியளவில் மூளாய் காளி கோயிலுக்கு சமீபமாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸார் நின்றனர்.

(அவர்களின் சீருடை இலக்கம் 70853, 84310) (அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கம் 2794) நான் இடதுபுறமாக சென்று கொண்டிருந்த போது அவர்கள் வலது பக்கத்தில் ஒரு இளைஞனை மறித்து வைத்து கதைத்துக் கொண்டு நின்றனர்.

என்னைக் கண்டதும் இடது பக்கம் வந்த பொலிஸார் என்னை மறித்து எங்கே போகின்றீர்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? என விசாரித்துவிட்டு சாரதி அனுமதிப்பத்திரம் காப்புறுதிப் பத்திரம் போன்றவற்றை என்னிடம் இருந்து வாங்கினர்.

ஏன் விசாரிக்கிறீர்கள் எனக் கேட்டேன். இதன்போது ஒரு பொலிஸார் தனது இடது கையை நீட்டி உள்ளங்கையில் ஊதுமாறு பணித்தார். சாராயம் குடித்திருக்கிறாய் சோதிக்கவேண்டும் என்றனர். எங்கே பார்ட்டிக்கு போய் வருகின்றாய் எனக் கேட்டனர்.

யாழ். பொலிஸாரிடமிருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை | Request To Protect The Public From Jaffna Police

கையில் ஊதினால் எப்படி சோதிக்க முடியும்? பலூனில் தானே சோதிப்பது எனக் கேட்டேன். நான் திருப்பி கதைத்தவுடன் எனது மோட்டார் சைக்கிளைப் பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டனர். என்னை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்போவதாக அச்சுறுத்தினர். அடிக்க முற்பட்டனர்.

தமது மோட்டார் சைக்கிளை இயக்கி என்னை இடிப்பதற்கு முற்பட்டனர். எனது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப் போவதாகவும் என்னை இறங்குமாறும் அச்சுறுத்தினர்.

இதன்போது நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இந்த இரு பொலிஸாரின் அச்சுறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்தேன். ஆனால் அங்கிருந்து எனக்கு சாதகமாக பதில் அளிக்கப்படவில்லை.

யாழ். பொலிஸாரிடமிருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை | Request To Protect The Public From Jaffna Police

என்னை மிரட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் இலக்கத்தை நான் குறிப்பெடுத்த போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பின்பக்கம் திரும்பி குனிந்து நின்று தனது ஆசனவாய்ப் பகுதியைக்காட்டி அதற்குள் இலக்கம் இருக்கு எடுக்குமாறு மிகக் கேவலமாக முறையில் நடந்து கொண்டார். என்னை பலமுறை தாக்க முற்பட்டனர்.

நான் பொலிஸ் நிலையம் செல்ல மறுத்த போது பொலிஸ் வாகனத்தைக் கொண்டு வருமாறு தொலைபேசியில் யாருக்கோ கூறினர். 10 நிமிட நேரம் என்னை வீதியில் வைத்து அச்சுறுத்தினர்.

பின்னர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடினர். அவர் எனது விபரத்தைக் கேட்டறிந்து நான் ஒரு ஊடகவியலாளர் என இவர்களுக்கு கூறினார். இதன் பின்னர் எனது ஆவணங்களைக் கையளித்துவிட்டு இது உனக்கு இறுதி எச்சரிக்கை என அச்சுறுத்திவிட்டு சென்றனர். நான் வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர். ஊடகவியலாளர், அரச உத்தியோகத்தர், சமூக செயற்பாட்டாளன்

எனக்கே வீதியில் இந்த நிலை என்றால் ஏனைய சாதாரண அப்பாவிப் பொதுமக்களை பொலிஸார் எவ்வாறு நடத்துவார்கள்? அவர்களின் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம்? வட்டுக்கோட்டை பொலிஸார் ஏற்கனவே, சித்தங்கேணியை சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கி படுகொலை செய்தனர்.

மேலும் பலரை சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். கடந்த வருடம் பொன்னாலையில் அன்றாடச் சீவியத்திற்கே கஷ்டப்படும் அப்பாவிக் குடும்பம் ஒன்று குழாய்க் கிணறு வெட்டியபோது அனுமதி எடுக்கவில்லை எனக் காரணம் கூறி அவர்களிடம் இருந்து 8,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பறித்து சென்றனர்.

இவ்வாறு இவர்களின் அராஜகம் தொடர்ந்து செல்கின்றனர். எனவே, என்னை அச்சுறுத்திய மேற்படி இரு பொலிஸாருக்கும் கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்த எமது பிரதேச மக்களைப் பாதுகாக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *