அம்பாறை மாவட்டத்தில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை 

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்நாகாடு சாவாறு பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை(31) மாலை காணாமல் போன குறித்த மீனவர் நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போனார்.

தமிழர் பகுதியில் காணாமல் போன மீனவர் சடலம் மீட்பு | Missing Fisherman S Body Recovered In Tamil Area

இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி செவ்வாய்க்கிழமை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய செவ்வாய்க்கிழமை ( 01) குறித்த காணாமல் போன மீனவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து இன்று (01) செவ்வாய்க்கிழமை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் போன மீனவரின் சடலம் நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பு செல்லப்பா வீதி பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றி வேல் (பெரிய தம்பி) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலதிக விசாரணை பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *