
பாகம் இரண்டின் ஐந்தாவது தொடர்
ஆரம்ப காலத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தில் தளபதி பரமதேவா தலைமையிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக நடந்து கொண்டியிருந்தது, ஆனால் இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டதும் இந்தியாவில் பயிற்சி எடுக்கும் முதலாவது அணியில் தளபதி பரமதேவாவின் பேரையும் இணைத்த தேசியத் தலைவர் அவருடன் யோகன் பாதர் போராளி காந்தன் என சில குறிப்பிட்ட போராளிகளின் பேர் விபரம் அடங்கியப ட்டியலை தளபதி பரமதேவாவிற்கு அனுப்பி இருந்தார்,
தகவல் தனக்குக் கிடைத்ததும் அவர் மட்டு, அம்பாறை இணைப்பாளராக போராளி ராம் என்பவரையும் அவருக்கு உதவியாக கப்டன் பிறான்சிஸ் அவர்களையும் தான் வரும் வரைக்கும் மாவட்டத்தின் அனைத்து வேலைகளையும் செய்யுமாறு சொல்லிவிட்டு உடனே தன்னோடு பயிற்சி எடுக்கும் போராளிகளைக் கூட்டிக்கொண்டு முதலில் யாழ்பாணம் சென்றார், அடுத்து அங்கு இருந்து படகு மூலம் இந்தியா சென்றார்,அங்கே சென்ற அவர் திறமையாகப் பயிற்சி எடுத்தது மட்டுமின்றி தேசியத் தலைவரின் நல் மதிப்பையும் பெற்றுயிருந்தார், பயிற்சி நிறைவு அடைந்ததும். அவர் மீண்டும் தேசியத் தலைவரால் தமிழகம் இருந்து போராளிகளோடு வடமாகாணம் அனுப்பப்பட்டார்.
இதே காலப்பகுதியில்தான் மூத்தபோராளி காந்தன் அவர்களும் இந்தியாவில் முதலாவது பயிற்சிமுடித்து யாழ்ப்பாணம் வந்து கிட்டு அவர்களின் அலுவலகத்தில் நின்றார் ஆனால் இவர்களை மட்டக்ளப்புக்கு எப்படி அனுப்பலாம் என கிட்டு அண்ணை திட்டம் போட்டுக்கொண்டிருந்தார், ஆனால் காந்தனிடம் சிறிலங்கா தேசிய அடையாள அட்டை இருந்தது பரமதேவாவிடம் அடையாள அட்டை இல்லை, அதனால் காந்தன் மட்டும் இலங்கை போக்குவரத்துக்கழக பேருந்தில் மட்டக்களப்பு அனுப்பப்பட்டார்
ஆனால் பரமதேவா மட்டக்களப்பு செல்வதற்காக வன்னிக் குறுப்போடு இணைக்கப்பட்டார். அப்பொழுது அவர் மணலாறு போய் நின்ற காலத்தில்தான் 05/08/1984 அன்றுமுல்லை ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் பரமதேவா பங்குபற்றி சிறந்த வீரனாகச் செயற்பட்டார்.
லெப்.பரமதேவா மட்டக்களப்பு மாவட்டதிற்கு தலைவரால் அனுப்பப்பட்டார்.05/08/1984அன்று மாலை ஐம்பது பேரைக்கொண்ட முல்லைத் தீவுமாவட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் “கொரில்லா” அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.. ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள்
பரமதேவும் சண்டை முடிந்த கையோடு நடையில் மிகவேகமாகப்போய்ச்சேர்ந்தார், மட்டக்களப்பிற்கு அங்கே சென்று என்ன செய்தார் என்பதை பிறகு பார்ப்போம்
1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த சிறு..சிறு தாக்குதல்களைப் பற்றிப் பார்ப்போம்
04/08/1984/ அன்று பதினெட்டு சிங்களப் படையினர் வல்வெட்டித்துறையில் வைத்து விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்தனர். அம்முற்றுகையை பொது மக்களின் ஆதரவுடன் இரு பகுதிக்கும் இடையே நடந்த சண்டையில் ஆறு கடற் படையினர் கொல்லப்பட்டனர். மூவர் காயம் அடைந்தனர். இழப்புக்கள் இன்றி முற்றுகையை உடைத்து விடுதலைப் புலிகள் வெளி ஏறினார்கள்.

05/08/1984 அன்று முல்லை ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. முல்லை மண்ணில் ஓட்டிசுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் பரமதேவா பங்குபற்றி சிறந்த வீரனாகச் செயற்பட்டார். லெப்.பரமதேவா மட்டக்களப்பு மாவட்டதிற்கு தலைவரால் அனுப்பப்பட்டார், அப்பொழுது மட்டுநகரை நோக்கிப் பயனித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு இச்சந்தர்ப்பம் கிடைத்தது. 05/08/1984 அன்று மாலை ஐம்பது பேரைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் “கொரில்லா” அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.. ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள்
1984 நடைபெற்ற சிறு, சிறுநடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்………

09/04/1984 அன்று யாழ் றெயில் நிலையத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வைத்து விடுதலைப்புலிகள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இராணுவ வண்டி முற்றாகச் சேதம் அடைந்தது. 10/04/1984 அன்று விடுதலைப் புலிகள் பொது மக்களின் ஆதரவுடன் பருத்தித் துறை பொலிஸ் நிலையத்தைத் தாக்கி எரியூட்டியதுடன் அங்கு இருந்து இராணுவப் புத்தகங்களையும் கைப்பற்றினர்.
04/05/1984 அன்று விடுதலை புலிகளின் முக்கிய தளபதியான சீலனை காட்டிக் கொடுத்தமைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொன்னையா, சுப்பிரமணியம் என்ற நபருக்கு மீசாலையில் வைத்து விடுதலைப் புலிகள் சாவொறுப்பு வழங்கினார்கள்.
16/05/1984 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை காட்டிக் கொடுத்த வவுனியாவைச் சேர்ந்த தர்மபாலா என்பவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது
18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய அற்பணிப்பைச் செய்து அனைத்துப் போராளிகளிற்கும் ஒரு வளிகாட்டியாக தனது வீரச்சாவைப்பதிவு செய்தார்,

இப்போராளி தமிழிழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில் முதலாவது குப்பி கடித்து வீரச்சாவு அடைந்த போராளி இயக்கப் பெயர் வீரவேங்கை பகீரதன் சொந்தப் பெயர் வேலுப்பிள்ளை அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: 02.05.1959
18.05.1984 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் படையினரால் முற்றுகையிடப்பட்டு அவரைக்கைது செய்து அவர்களின் இராணுவ முகாமிற்குக்கொண்டு செல்லப்பட்டபோது அவர் சயனைட் உட்கொண்டு அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார், அடுத்து அவரின் வித்துடலை உறவினர்களிடமிருந்து வேண்டியெடுத்து விடுதலைப் புலிகள் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைத்துள்ளார்கள், ஆரம்பத்தில் பொன்சிவகுமரன் குப்பி கடித்து தமிழர்களிற்கு வழிகாட்டினாலும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிற்கு வளி காட்டியது இவரே ஆவார் அதைத்தொடர்ந்து ஆயிரக்காணக்கான எமது போராளிகள் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பம் ஏற்படும்போது குப்பிகடித்து வீரச்சாவு அடைந்துள்ளார்கள்,
காரணம் அவர்கள் உயிரோடு பிடிபட்டால் எதிரி கடுமையான சித்திரவதை செய்து எமது போராட்டத்தில் இரகசியம் எனக ருதப்படும் எமது தீவிர ஆதரவாளர்கள் பற்றிய தகவல், மற்றும் எமது தலைவரின் மறைவிடம், ஆயுதக் களஞ்சியங்களின் மறைவிடம், எமது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான இரகசியங்களை எதிரி அறிந்த பின் அவரைக் கொலை செய்து விடுவான்,
அதனால்தான் எமது தலைவர் இவ் நடைமுறையை அனைத்து போராளிகளிற்கும் கொண்டு வந்தார்,
ஆயுதப்போராட்டம் மைனிக்கும்வரை இது நடைமுறையில் இருந்தது, 04/08/1984/ அன்று பதினெட்டு சிங்களப் படையினர் வல்வெட்டித்துறையில் வைத்து விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்தனர். அம்முற்றுகையை பொது மக்களின் ஆதரவுடன் இரு பகுதிக்கும் இடையே நடந்த சண்டையில் ஆறு கடற் படையினர் கொல்லப்பட்டனர். மூவர் காயம் அடைந்தனர். இழப்புக்கள் இன்றி முற்றுகையை உடைத்து விடுதலைப் புலிகள் வெளி ஏறினார்கள்.
05/08/1984 அன்று மாலை ஐம்பது பேரைக்கொண்ட முல்லைத்தீவுமாவட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் “கொரில்லா” அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
06/08/1984 அன்று யாழ் மருத்துவமனைக்கு அண்மையில் சிங்களப் படைக்கவச வாகனங்களில் வந்து நின்று பொது மக்களின் கட்டிடங்களை சேதப்படுத்திக்கொண்டு இருந்தவேளை விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிராகக் கைக்குண்டுகளை வீசி நடாத்திய தாக்குதலில் அதிகாரி ஒருவர் அவ் இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு இராணுவத்தினர் காயம் அடைத்தனர்.
11//08/1984 அன்று மன்னார் பூநகரி பிரதான பாதையில் நிலக்கண்ணி வெடிவைத்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வண்டியில் வந்த பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஜீப் வண்டியும் முற்றாக அழிக்கப்பட்டதுடன் ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
14/08/1984 அன்று இராணுவம் மற்றும் பொலிஸ் இணைந்து இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல படையினர் காயம் அடைந்தனர்.
24/08/1984 அன்று கரவெட்டி மேற்கில் பாதையொன்றில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியை அகற்ற முயன்ற இராணுவம் மீது அது வெடித்ததில் எட்டு இராணுவத்தினர் அவ் இடத்திலே கொல்லப்பட்டனர்.
01/09/1984/ அன்று செம்மலை ஊடாக செல்லும் முல்லைத்தீவு கொக்குளாய் பாதையூடாக மூன்று வாகனங்களில் இராணுவம் வந்து கொண்டிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு ஜீப்வண்டி கண்ணிவெடியால் சிதறியது. மற்ற இரண்டு வாகனங்களை நோக்கி விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் மொத்தம் பதினைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

22/09/1984 பரமதேவின் பிரச்சனையைப் பிறகு பார்ப்போம் என குறிப்பிட்டு இருந்தேன் அங்கே சென்ற பரமதேவா அனைத்துப் போராளிகளையும் ஒருங்கிணைத்தார் போராளி காந்தன், காக்கா, பரமதேவா கட்டன் பிரான்சிஸ் என என்னும் பல போராளிகள் மற்றும் ஆதரவாழர்களையும் இணைந்து. கொண்டு 22/09/1984 களுவாஞ்சிக்குடி சிங்களக் காவல் நிலைய தாக்குதலுக்குச் சென்று ஒரு பாரிய தாக்குதலை நடாத்தியுள்ளார். எதிரி முன்ரே தாக்குதலை ஆரம்பித்தமையால்
தாக்குலில் லெப். பரமதேவா, ஆதரவாளர் ரவியும், வீரச்சாவு அடைந்தனர். முன்னரே பொலிஸார் உசார் அடைந்தமையால் விடுதலைப் புலிகள் பாதுகாப்பின் நிமித்தம் பின்வாங்கிச் சென்றார்கள்.இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதுவொரு படிக்கல்லாகவே அமைந்தது அவரின் வீரச் செயலை அறிந்து ஆயிரக்கணத்கான இளைஞர் யுவதிகள் அவ்மாவட்டத்தில் இருந்து விடுதலைப் போராட்டதில் இணைந்து போராடி வீரச்சாவு அடைந்தார்கள், இதற்கு இவரே வழிகாட்டியென்பதை மறக்க முடியாது
முதலாவது பாசறையில் பயிற்சி எடுத்த பல கிழக்கு மாகாணப் போராளிகள் இருந்தாலும், இச்சண்டையில் திறமையாகச் செயல்பட்ட காரணத்தால் கிழக்கு மாகணத்திற்கு முதல் தாக்குதல் தளபதியாக பரமதேவா தலைவரால் அனுப்பப்பட்டார். 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப் படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் யாழில் செயல்பட்டார். அதே போல் கிழக்கு மாகாணத் தாக்குதல் தளபதியாக ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர்.
பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள்அவரை நம்பினார்கள்
2/03/1984 பயிற்சியை முடித்து வந்த பரமதேவாவை கிட்டு அவர்கள் தான் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.
வெற்றியடையா விட்டாலும், மட்டு மாவட்டத்தில் நிலை கொண்டுயிருந்த எதிரி படைகளிற்கு ஒரு சவாலாகவே அமைந்தது. அச்சண்டையில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன், வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும்; ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்து இருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டது. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனைகளும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.
பரமதேவாவின் வீரச்சாவிற்குப் பின்னர் : 1984/04ம் மாதம் வரை மட்டு, அம்பாறை இணைப்பாளராக போராளி காக்கா தலைவரால் நியமிக்கப் பட்டுயிருந்தார்.பின்னர் அனைத்து செயல்பாடுகளிலும் பங்குபற்றிய பிரான்ஸ்சிக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்

அவரின் கோட்டைக்கல்லாறு விட்டிற்குச் சென்றபோது சமூகவிரதிகளால் இந்திய இராணுவத்திற்கு தகவல் தெரிவித்தமையால் இந்திய இராணுவமும் தேசத்துரோகிகளும் இணைந்து முற்றுகையிட்டபோது, முற்றுகை முறியடித்து ஓடும்போது காலில் போத்தல் துண்டு வெட்டி இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது அதை பின் தொடர்ந்து சென்ற இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவ்விடத்திலே கப்டன் பிரான்சிஸ் வீரச்சாவு அடைந்தார், மேற்படி பொறுப்பாகயிருந்த ராமு என்பவர் அதே ஆண்டு இயக்கத்தில் இருந்து விலத்தி இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருந்த வேளை சுகயினம் ஏற்பட்டு சாவடைந்துள்ளார்,
01/09/1984 அன்று விடுதலைப் புலிகள் நடாத்திய அச்சுவேலி, வசாவிளான் பகுதியில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதிலில் கவச வண்டி முற்றாக சேதம் அடைந்தது அதில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1984 ஆண்டு 09ஆம் மாதம் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பயிற்சி முகாம்பற்றி
அதில் பயிற்சி எடுத்த ஆரம்ப காலப்போராளி மாயா குறிப்பிடுகையில்

நாங்கள் இருநூற்றைம்பது இளைஞர்கள் அங்கே சென்று இருந்தோம். போனவுடனே எங்களின் பயிற்சிக்கான உடைகள் தரப்பட்டதோடு முடி, நகம் அனைத்தையும் வெட்டுமாறு கட்டளை வழங்கப்ட்டது; அதற்கு ஏற்றவாறு நாங்களும் ஒத்துழைப்பு வழக்கிங்கினோம்.
எங்களின் பயிற்சி முகாமிற்கு மேலாளராக லெப். கேணல் பொன்னம்மான் இருந்தார். பயிற்சி முகாம் பொறுப்பாளராக போராளி அத்தி என்பவர் நியமிக்கப் பட்டிருந்தார். எங்களிற்கான பாடங்களை பொன்னம்மான் மற்றும் மூத்த போராளிகள் சிலரும் எடுத்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சியை சுக்குளா, போள், முத்து, போராளிவேணு, இவர்கள் தந்தார்கள். அதில் ஒரு போராளி மட்டுமே வருத்தம் காரணமாக இடையில் வெளியேறி விட்டார். ஏனைய இருநூற்று நாப்பத்தொன்பது போராளிகளும் பயிற்சி முடிந்ததும் தமிழீழம் அனுப்பப்பட்டார்கள்; என குறிப்பிட்டார்.

பண்டிதர் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில்தான் லெப். பரமேதேவாவின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலும் அவனின் வீரச்சாவும் நடைபெற்றது. யாழ் மாவட்ட முதல் தளபதி கப்டன். பண்டிதர் அவர்கள் வரலாறு, இதே காலப்பகுதியில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக கப்டன். பண்டிதர் அவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் கடமையாற்றிக் கொண்டுயிருந்தார்.
அவன் தனது பதினாறுவயதின் இறுதிலேயே தமிழீழவிடுதலை என்பதில் ஆழமான ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கின்றான். விடுதலைக்கான பாடல்களை எழுதி தனது பாடசாலை கொப்பியில் அழகாக வைத்திருப்பதில் ஆரம்பித்து விடுதலைக்காக ஆயுதப் போராட்ட அமைப்பை ஆரம்பித்திருந்த தேசியதலைவரை 1977ல் சந்தித்து தன்னையும் தலைவருடன் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததுவரை அவனது ஆரம்பம் இருந்திருக்கிறது.
எடுத்தவுடன் எவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை கவனித்து அவர்களின் உறுதியை சோதித்து அதன்பின்னரே தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தலைவரின் இயல்புக்கேற்பவே முதன்முதலாக தலைவருக்கும் பண்டிதருக்குமான அந்த சந்திப்பு இருந்திருக்கிறது.
ஒரு கைத் துப்பாக்கியின் விசையை இழுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மெலிந்தவனாகவும் இருந்தமையால் “தற்போது நீ !வீட்டபோய் நில் பெரியஆளாக வந்தவுடன் எடுக்கலாம் என தலைவர் அவனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.
மாதக்கணக்கில் ஆரம்பித்து சிலவேளைகளில் வருடக் கணக்குக்கு கூட இப்படி காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இந்த காத்திருப்பு காலத்தில்தான் ஒவ்வொருவரையும் தலைவர் அடையாளம் காணுவார். உணர்ச்சிவசப்பட்டு விடுதலைக்கு வருபவர்களில் இருந்து உணர்வுபெற்று விடுதலைக்காக வருபவர்களை வடிகட்டி எடுக்கும் தலைவரின் ஆரம்பகால இந்த அணுகு முறைதான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கும் உறுதியான அத்திவாரத்துக்கும் வலுச்சேர்த்தது.
எழுபத்தெட்டில் பண்டிதரும் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டான்.எந்தநேரமும் வாட்டிக் கொண்டிருந்த ஆஸ்மா நோயுடன் அவன் விடுதலைக்காக முழுநேரமானான்.
அவன் நிறையவே தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டான். அவரிடம் இருந்து எளிமை, அவரிடம் இருந்தே ரகசியம்பேணும் தன்மை, அவரிடம் இருந்தே மக்களை ஆழமாக நேசிக்கும் பண்பு, என்று எல்லாமே அவரைப்போலவே அவனும்…… எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் அவனில் இன்னும் ஆழமாக புகுந்துகொண்டது..!
இதனை அவதானித்த தலைவர் 1980 ஆரம்பத்தில் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார்.
அதை விட இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளராகவும் அவனே இருந்தான்.எல்லோருக்கும் மாதம் முதல்திகதியில் அந்த மாதத்துக்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கப்பட்டுவிடும். தினசரி சாப்பாட்டுச்செலவு பத்துரூபா வீதம் கணக்கு பார்த்துகொடுக்கப்படும். இந்த பணத்துக்கான செலவுக்கணக்கு மாதமுடிவில் பண்டிரிடம் கொடுத்தால்தான் மறுமாதத்துக்கான பணம் பெறமுடியும். தலைவர் உட்பட அனைவருக்கும் இதே வரையறையைதான் பண்டிதர் வகுத்திருந்தான்.
ஒவ்வொருவரின் கணக்குத் துண்டுகளையும் பார்த்து அதில் இருக்கும் அதிகமான செலவுகளை குறைப்பது சம்பந்தமாக அவர்களுடன் அவன் கதைக்கும் பாங்கு இன்னும் நினைவுக்குள் நிற்கின்றது.
பகல்முழுதும் சைக்கிளில் அங்கும், இங்கும் என்று இயக்கவேலைக்களுக்காகவும், மக்களை சந்திப்பதற்காகவும், அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓடிக்கொண்டே இருப்பான். இரவு அவன் தங்குமிடத்தில் அனைவரும் தூங்கிய பின்னரும் இவன் தனித்து ஒரு குப்பி விளக்கு ஒளியிலோ மெல்லிய வெளிச்சத்திலோ அன்றைய கணக்குகளை எழுதிக் கொண்டிருப்பான் மிகவேகமாகவே பண்டிதர் அனைவரதும் தேவைகளையும். அனைவரதும் கோரிக்கைகளையும். உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிதிபொறுப்பு என்பதைவிட ஆயிரம் மடங்கு கடினமானது ஆயுதபொறுப்பு. அந்த நேரம் இருந்த ஆயுதங்களில் ஒருபகுதி எந்தநேரமும் நிலத்துக்கு கீழாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
அப்படி புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களின் விபரங்கள் அவை வைக்கப்பட்ட திகதி, மீண்டும் எடுத்து மீளவும் சரிபார்க்கப்பட்டு வைக்கப் படவேண்டிய திகதி, என்று அனைத்தும் அவனால் மிகவும் அழகானமுறையில் எழுதப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் என்ன…. அதை வேறுயாருமே படிக்க முடியாது. இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு இரகசிய சங்கேத எழுத்து முறையைக் கண்டு பிடித்தான். அதில்தான் எழுதுவான். இதனை படிக்கக் கூடியவர்களாக இயக்கத்தில் தலைவரும், லெப்.சங்கரும், ரஞ்சன்லாலாவுமே விளங்கினார்கள்.முதலாவது மாவட்டத் தளபதி என்ற பொறுப்பு தமிழீழத்தில் கப்டன். பண்டிதர் என்பவரே யாழ். மாவட்டத்தில் தலைவரால் நியமிக்கப்பட்டார்,

ஆனால் அனைத்து மாவட்டங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இவருக்கு இருந்தது. இவர்! தன்னைப் பொறுப்பாக விட்டதும்; மிகவேககமாக இயங்கத் தொடங்கினார், இராணுவதிற்கு எதிராகப் பல “கொரில்லா” தாக்குதல்களை நடாத்தி இராணுவத்தை கடுமையான முறையில் பயமுறுத்தி வைத்திருந்தார். இவரின் முதலாவது வேலையாக வெளிநாட்டில் இருந்து ஒரு R.P.G உந்துகணை செலுத்தி ஒன்றை வேண்டி இந்தியா கொண்டுவந்து அதைமிகவும் பாதுகாப்பான முறையில் அதை யாழ்பாணம் கொண்டு வந்தார். ஆனால் முதல் முதலாக இலங்கைக்கு கொண்டுவந்த R.P.G யும் அதுவாகவே இருந்தது;
ஏனெனில் அந்தக் காலத்தில் இலங்கைப் படைகளிடம் இவ்ஆயுதம் இருக்கவில்லை.அந்தக் காலப்பகுதியில் தான் இந்தக் கதை சிங்கள அரசுக்குக் “காட்டுத்தீ “போல் பரவியது. கண்டம் விட்டுப் பாயும் பெரிய ஆயுதம் ஒன்றை விடுதலைப் புலிகள் பெற்று விட்டார்கள் என்பதே..! அந்த வதந்தியாகும். இந்தத் தகவல் கிடைத்ததும்; இராணுவம் யாழ். குடாவில் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது. 09//01/1985 அச்சுவேலியிலுள்ள எமது “கொரில்லா” தளமொன்றை தேடிக்கொண்டு இருந்தகாலம் அது… அப்பொழுது தான் அச்சுவேலியில் பண்டிதர் இருப்பதாகத் தகவல் போய் அவ் வாழைத் தோட்டத்தைச் சுற்றி வளைக்கின்றது சிங்களப் படை, அப்போது !அத்தோட்டத்தில் கப்டன். பண்டிதர், சின்னலோ உட்பட பதினைந்து போராளிகள் அங்கே இருந்தார்கள். உடனே முடிவு எடுத்த பண்டிதர் சின்னலோவுடன் பத்துப்பேரை எதிரியை நோக்கி சுட்டுக் கொண்டு இருக்குமாறு கட்டளை வழங்கினார். இராணுவத்தை நோக்கி சண்டையிடுமாறு சொல்லி விட்டு தான் அவசர, அவரமாக R.P.G உந்துகணை செலுத்தியை வாழைத்தோட்டத்திற்குள் வெட்டி புதைக்கின்றார் பண்டிதர்.

அது எதிரி எடுக்கக் கூடாது எனத் தாட்ட இடத்தில் இருந்து வேறு இடம் சென்று அங்கு இருந்து நான்கு போராளிகளுடன் இறுதி தோட்டா இருக்கும் வரை சண்டையிட்டுக்கொண்டே இருந்தார் பண்டிதர்.
பண்டிதரைநோக்கி சிங்களப்படை சுட்டுக்கொண்டு ஓட, இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி, சின்ன லோவுவுடன் நின்ற பத்துப் போராளிகளும், முற்றுகையை உடைத்து வெளியே செல்கின்றார்கள்……
தொடர்ந்து பண்டிதர் இராணுவத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு இருக்கின்றார்….. பல மணித்தியாலம் இராணுவத்தைக் களைப்படையச் செய்து தனது தோட்டா ரவைகள் முடிந்ததும் “குப்பி” கடித்து தன்னோடு நின்ற நான்கு போராளிகளுடன் 09/01/1985அன்று வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றார்கள்.”கெரில்லா” வீரர்களைக் கைநழுவ விட்ட இராணுவத்தினர், அச்சுவேலிக் கிராமத்திலுள்ள ஐம்பது அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு பயங்கவாதிகள் என்ற முத்திரைகுத்தி, “வெற்றி வாகை” சூடிக் கொண்டனர். இதே காலத்தில் தான் நடக்கக்கூடாத விடயம் ஒன்று நடந்தது.
அடுத்து திருமதி இந்திராகாந்தியின் மரணமும் அதனால் எமக்கு ஏற்பட்ட பின்னடைவையும் விரிவாகப் பார்ப்போம்
தொடரும்
அன்புடன் ஈழமதி