இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞன் பாஸ்கரன் குமாரசுவாமி கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.எனினும் அவரை நீதிமன்ற வாயிலில் வைத்தே கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு 09 ஆண்டுகளை கழித்துள்ளார்.

 இவரை 2019 இல் நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் அவர் தான் மீண்டும் சிறிலங்கா செல்ல மாட்டேன் எனக்கு அங்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என வாதாடுகிறார்.

இறுதிப்போரில் இவர் தனது தந்தை மற்றும் அண்ணி என நான்கு பேரை இழந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இன்று (27) அவர் நாடுகடத்தப்படவுள்ளார் என அவருக்காக வாதாடும் வழக்கறிஞர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.இது தெடார்பில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு.. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *