பாபா வாங்கா, தனது அதிசயமான முன்னறிவிப்புகளுக்காக உலகளவில் பிரசித்திபெற்றவர். தற்போது, அவர் கூறிய ஒரு கணிப்பு பெரும் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.

இதன்படி பூமியில் முதன்முறையாக ஏலியன்கள் (விண்வெளி உயிரினங்கள்) எங்கு தொடர்பு கொள்வார்கள் என்பது குறித்து கணித்துள்ளார்.

ஹங்கேரி நாட்டை நோக்கி ஏலியன்கள் அனுப்பவுள்ள முதற்கட்ட சிக்னல்

அந்த கணிப்பின் படி, 2125ஆம் ஆண்டில் ஹங்கேரி நாட்டை நோக்கி ஏலியன்கள் முதற்கட்ட தகவல் சிக்னல்களை அனுப்புவார்கள். இதைத் தொடர்ந்து, அவர்களுடன் நேரடி தொடர்பும் ஹங்கேரியில் நடைபெறும் என பாபா வாங்கா கூறியிருந்தார். அவர் மிகத் தெளிவாக, பூமியில் ஹங்கேரி தான் விண்வெளி உயிரினங்களின் முதல் தொடர்புக்கான இடமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பாபா வாங்காவின் மற்றுமொரு மிரள வைக்கும் கணிப்பு | Baba Vangas Terrifying Prediction About Aliens

இக்கணிப்பு மீது பலர் கேள்வி எழுப்புகிறார்கள். பாபா வாங்காவின் கணிப்புகள் மீது பொதுவாகவே விஞ்ஞான உலகம் அதீத நம்பிக்கையுடன் இருப்பது கிடையாது. ஏனெனில், அவரது கணிப்புகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. பல விஞ்ஞானிகள் இவற்றை வெறும் ஊகங்கள், நம்பிக்கைக்குரிய வார்த்தைகளாகவே பார்க்கிறார்கள். இருப்பினும், தற்போது விண்வெளியில் இருந்து வரும் அபூர்வமான சிக்னல்களை கவனித்து, உலகத்திற்கு வெளியே அறிவார்ந்த உயிரினங்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் பல ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்பாராத ரேடியோ சிக்னல்கள் 

சமீபத்தில், Ursa Major நட்சத்திரக் குழுவில் உள்ள ஒரு இரட்டை நட்சத்திர மண்டலத்திலிருந்து எதிர்பாராத ரேடியோ சிக்னல்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 1,600 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த சிக்னல்களை வைத்தியர் ஐரிஸ் டி ரைட்டர் என்பவர் கண்டறிந்துள்ளார். இது ஒரு மறைந்த வெள்ளை பூமி நட்சத்திரமும் ஒரு சிவப்பு பூமி நட்சத்திரமும் இணைந்து வெளியிடும் காந்தத் துறைகளின் தாக்கத்தால் உருவாகியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

பாபா வாங்காவின் மற்றுமொரு மிரள வைக்கும் கணிப்பு | Baba Vangas Terrifying Prediction About Aliens

இதுபோன்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் விண்வெளி உலகத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன. இருப்பினும், 2125ஆம் ஆண்டு ஹங்கேரியில் ஏலியன்கள் தொடர்பு கொள்வார்கள் என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் தற்போது இல்லை. ஆனால், அந்த சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்கவும் முடியவில்லை 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *