யாழில் (Jaffna) குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்றைய தினம் (02.02.2025) மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று தெற்கு பகுதியில் உள்ள குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ‘

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது