இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகள் போன்றே வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு அந்தத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு ஜனாதிபதி அனுரவுக்கு அழைப்பு | Anura Call Diaspora Tamils Invet Northern Province

அரசாங்கம் அதன் அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, பிராந்தியத்திற்கான இலக்கு முன்முயற்சிகளை உறுதிசெய்து வருவதாக அனுர மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு  இலங்கைக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் புதிய சுற்றுலா இடங்களை அரசாங்கம் அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே வல்வெட்டித்துறையிலும் அனுர தனது அமைச்சர்கள் சகிதம் பொதுக்கள் சந்திப்பொன்றில் இன்று ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *