தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு………   தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் LTTE MASTER BOOK

தலைமைப்பீடத்தின்=கதை CAPITAL OF STORY

இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி சுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் என்பவரால் எழுதப்பட்டது  இது தமிழீழ விடுதலைப் புலிகளின் மாஸ்ற்றர் book. இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,

பாகம்01 _ஆரம்பம் ஆரம்பம்தொடக்கம் 1980 வரையான பிரதான உள்ளடக்கம் மேலும் பல கதைகள் உள்ளே இருக்கின்றது!
################################பாகம்01 _ஆரம்பம் இருந்து1980 வரையான பிரதான உள்ளடக்கம் மேலும் பல கதைகள் உள்ளே இருக்கின்றது!

################################
01. 1915 சிங்களவர்களால் முஸ்லிம்களிற்கு எதிராக வன்முறை மேற்கொள்ளப்பட்டது;

02. 1957  பண்டா, செல்வா ஒப்பந்தம்;

03. 1958 சிங்களவர்கள், தமிழருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்;

04. 1970 தமிழர்கள் நீதி கேட்டு அகிம்சை வழியில் போராட்டம்;

05 .1972 முதல் தாக்குதலுடன் புதிய புலிகள் ஆரம்பம்;

06 .1972 அரசியலில் இருந்து செல்வநாயகம் ராஜினமா;

07. 1973 அரசிற்கு எதிராக தமிழ் தலைவர்கள் உண்ணாவிரதம்;

08 .1974 பொன்.சிவகுமாரன் வீரச்சாவு;

09 .1974 மாணவர் தலைவரைக் காட்டிக்   கொடுத்த கருணாநிதிக்கு  முதல் மரணதண்டனை 

வழங்கியதோடு; தொடர்ச்சியாக இப்படியானவர்களிற்கு சாவொறுப்பு வழங்கிக்கொண்டுயிருந்தார்;தேசித்தலைவர்.

10. 1976 புத்தூர் வங்கிக்கொள்ளை;

11 . செல்வநாயகத்தின் தலைமையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்;

12. செல்லக்கிளியின் துணிகரத் தாக்குதலும்; அவரின் வரலாறும்;

13 .1979 சீலன், புலேந்திரன் இணைவு;

14. திருநெல்வேலிப் பணம் பறிப்பு;

15 .1980 பொட்டுஅம்மான் இணைவு.

 இலங்கையின் ஆரம்ப வரலாறு……..

 சுமார் 40000 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னர்பூமியின் நடுப்பகுதி கடல் அற்ற நிலப்பரப்பாகவே காணப்பட்டது. அதாவது கடல் மனிதர்கள் அற்ற சுற்றுச் சூழ்ந்த பகுதியாகவே  காணப்பட்டது.

அக்காலத்தில்தான் உலகிலேயே முதல் தோன்றிய இனமான தமிழர்கள் ஆசியாவிலே வாழ்ந்தார்கள். அதாவது இப்பொழுது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் கடல் பதியில்தான் தமிழர்களின் முதலாவது பட்டணமான குமரிக்கண்டம் இருந்தது.

அங்கேதான் தமிழர்கள் மிகவும் தொன்மையான கலை கலாச்சரம் கொண்டு அவர்களுக்கான  தமிழ் மொழி உருவாக்கப் பட்டு மிகவும் நாகரியமான ஒரு மனிதக் கூட்டமாக வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். அக்காலத்தில் தான் பூமியின் இயற்கை மாற்றமான தட்டுக்கள் மாறுபது என்று தமிழர்கள் இதை அழைப்பார்கள். இந் நிகழ்வு நடப்பதற்கு முன்னர் பூமியில் ஒரு மாற்றம்   ஏற்படப்போவதை சில உயிரினக்கள் முன்கூட்டியே அறிந்ததாகவும்; அதாவது..! பறவைகள், மிருகங்கள் அவ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்ததாகவும்;  அதைப்  பார்த்துச் சில மக்களும் இடம்பெயர்ந்து சென்று இருக்கின்றார்கள்.  அது நடந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமிழர்களின் பட்டணமான குமரிக் கண்டம் முற்றாகக் கடலிற்குக் கீழ் இறங்கி விட்டது.  

இதற்குப் பின்னர் பூமியில் உள்ள பல நாடுகள் கடலால் பிரிந்து விட்டது. அந்த வகையில்  தமிழர்களின் தாய் நிலமான இலங்கையும், இந்தியாவும் பிரிந்தன. அதைத் தொடர்ந்து இலங்கையில் இராவணன் என்ற மன்னனின் ஆட்சி நடந்தது. அதே காலம் இந்தியாவில் கிருஷ்ணன் என்பவரின் ஆட்சி நடந்தது. ஆனால் இவர்களின் நடைமுறைகள் அனைத்தும்  தெய்வப்பிறவி  போன்ற நடை முறைகளாகயிருந்தது.இலங்கையில் உள்ள இராவணன் சிவனை வழிபட்டான். ஆனால் இந்தியாவில் உள்ள கிருஷ்ணன் தானே கடவுள்  என்றான்.  அதனால் இருவருக்கும் இடையில் சில பனிப் போர்களும், சண்டைகளும் நடந்துள்ளது.

தொடர்ந்து இயற்கையின் அனர்த்தத்தால் இராவணனின் காலத்தில் வாழ்ந்தவர்களில் 99 வீதமானவர்கள் அழிந்தார்கள்.  அதில் தப்பிய குறிப்பட்ட  சில தமிழர்கள் குகேனி என்ற பெண்ணின் தலைமையைப் பிற்பற்றி வாழ்ந்து வந்தார்கள். அடுத்து  இவர்கள்  இறை வழிபாடாக  நெருப்பையும்  மற்றும் நாகங்களையும்  வழிபட்டார்கள்.

இக்காலப் பகுதியில் கிறிஸ்சுவிற்குப் பின்னர்  700 நூறாம்  நூற்றாண்ட்டில் அக்காலத்தில் இந்தியவில் நடைமுறையில் இருந்த பேர்களில் ஒன்றான (லாலா நாடு)இந்தியாவில் வாழ்ந்த மன்னர்களில்  ஒருவனான விக்கிரம ஆதித்தனின்  மகனான விஜயனும், அவனின் தோழர்களும்,  குற்றச் செயல்களில்  ஈடுபட்டமையால்  இந்த நாட்டில்  வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்  என மன்னரால் உறுதிப்  படுத்தப் பட்டு விஜயனோடு  600 தோழர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.  இவர்கள் பாய்மரக் கப்பலில் கடலில் சென்று கொண்டு இருந்தார்கள்,

அப்பொழுது மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடையே உள்ள தம்பவன்னி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அக்காலத்தில் குகேனியின் குழுவினர் அவ்விடத்தை பண்டமாற்று செய்யும் இடமாக வைத்து இருந்தனர்.

அதாவது இவர்களின் நாட்டுப்பொருட்களை அவ்விடத்தில் வைத்திருந்தால் வேறு நாட்டவர்கள் தக்களின் நாட்டுப் பொருட்களைக்  கொண்டுவந்து இவர்களிடம் கொடுத்து விட்டு இவர்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களின் நாட்டிற்குச் சென்று  விடுவார்கள்.இப்படியான செயல்பாடுகள் அக்காலத்தில் நடப்பது வழமையாக இருந்துள்ளது .

இவர்கள் வந்தபோது குகேனியின் குழுவினர் பொருட்கள் வருவதாகவே எண்ணினார்கள். ஆனால் 600 ஆண்கள் வந்திறங்கினார்கள். வந்தவுடன் குகேனியின் குழுவினர் இவர்கள் அனைவரையும் தனித்தனியாக மரத்தில் கட்டி விட்டார்கள்.

அங்கு வந்தவர்களும்  சரி: குகேனியின் குழுவினரும் சரி; இருபகுதியினரும் தமிழை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் தங்களின் பிரச்சனையை வந்தவர்கள் இவர்களிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள் இருந்தும் இவர்கள் நம்பவில்லை.

பின்னர் அந்நாட்டு  இளவரசியான குகேனி இவர்களைப் பார்வையிட  வந்தார். எல்லோரையும் பார்வையிட்டு வந்தபோது விஜயன் என்பவரைப் பார்த்ததும் குகேனி என்பவருக்கு பாலியல் ரீதியான ஆசை ஏற்பட்டமையால்  அனைவரையும் அவிழ்த்து விட்டதோடு;  தானும் விஜயனோடு உறவில் ஈடுபட்டது மட்டும் அல்லாமல்; அனைத்து ஆண்களையும் பெண்களோடு உறவில் ஈடுபட  அனுமதியும்  வழங்கினார் குகேனி. அதனால் இருவரும் இனப் பெருக்கத்தினூடாக பெரும் மக்கள் கூட்டமாக இவர்கள் மாற்றம் அடைந்தார்கள்.

அவர்கள் இலங்கையில் உள்ள மன்னார், யாழ்  என பிற இடங்களிற்கும் வாழ்வதற்காகச் சென்றார்கள் . ஆனால் விஜயனோடு வந்து பெண்களை மணந்தவர்கள் எவரும் வேறு இடம் செல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்களின் நண்பர்களோடு அநுராதபுரம் சென்று அங்கே ஒரு செறிவான மக்கள் கட்டமைப்பாக வாழ்ந்தார்கள். அப்போது அவர்களுக்குள் இருவித  வழிபாடுகள்  காணப்பட்டது. குகேனியின்  ஆட்கள் இயற்கையை வழிபட்டார்கள்.   விஜயனின் வழித் தோன்றல்கள் புத்தரை வழிபட்டார்கள். இதனால் மனிதர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், இருவழிபாட்டுக் காரர்களிற்கும் இடையே சண்டைகளும் ஏற்படத் தொடங்கிய காலம் அது……!

இதற்குப் பிற்பட்ட காலத்தில் மேலும் பலர் பௌத்த  மதத்தை வழிபடுபவர்கள் இந்தியாவில்  இருந்து வந்து விஜயனின் நண்பர்களோடு வந்து இணைத்தார்கள். இவர்களில் ஒரு சிலர்  நாடு கடத்தியமையால்  இந்தியா  மீது வெறுப்பும் இந்தியாவில்  பேச்சு வழக்கில் உள்ள எந்த மொழியையும்  பேசக்கூடாது எனவும்;  தங்களிற்கு  என்றொரு  மொழியை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியது.  அதனால் பாலி எழுத்தையும்  எடுத்து  தமிழ் உச்சரிப்பில் கடசியில்  (னா) இணைத்து அதை வேறுபடுத்தி அதாவது  தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும்  இருக்கும். ஆனால் தமிழில் (அ )என்று உச்சரித்தால் சிங்களத்தில் ஆயன்ன என்றே உச்சரிக்க வேண்டும்.  அதாவது தமிழில் “அம்மா” என்றால் சிங்களத்தில் “அம்மே” என சிறு மாற்றங்களை செய்து சிங்கள மொழியை உருவாக்கினார்கள்.

 இதற்குப் பிற்பட்ட காலத்தில் அநுராதாபுரத்தில்  எல்லாளன் தலைமையில்  இயற்கையை வழிபடும் தமிழர்களும்  துட்ட கைமுனு  தலைமையில் சிங்களவர்களுமாக இரு இனங்களாக வாழத் தொடங்கினார்கள். ஆனால் இதே காலத்தில் தமிழர்கள் இலங்கையில் வட கிழக்கு அனைத்து இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது  சிங்களவர்கள் அநுராதபுரத்தில் மட்டுமே வாழ்ந்தார்கள். ஆதலால் ஒரு இடதில் மட்டும்தான் நாம் வாழுகின்றோம் .  இந்த  இடத்தை தமிழர்களிற்கு விடக்கூடாது என்ற மனநிலை  துட்டகைமுனு  நண்பர்களிற்கு ஏற்படத் தொடங்கிவிட்டது. 

அதனால் துட்டகைமுனு அணியையும்; எல்லாளன் அணியையும்;  மோதவிட்டு வெல்பவர்களிற்குத்தான்  அநுராதபுரம் சொந்தம் என இரு தரப்பினரும் தீர்மானித்தனர்.  பின்னர் இப்படி விட்டால் தேவையற்ற உயிர்சேதம் ஏற்படும் என்றும்; இரண்டு தலைவர்களான துட்டகைமுனும் (35 வயது ) எல்லாளனையும் (75 வயது)  மோதவிட்டு  வெல்பவர்களிற்குத்தான் அநுராதபுரம் சொந்தம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதற்கு அமைவாக இருபகுதி   வீரர்களும் மக்களும் பார்வையாளர்களாக  இருக்க வைக்கப்பட்டு இருவரையும் மோத விட்டார்கள். அதையெடுத்து  இருவரும் யானைக்கு மேலே இருந்து வாளால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டேயிருந்தனர். திடீரென யானை துள்ளிவிட எல்லாளன் தலைகீழாக சாய்ந்து வர அத்தருணத்தைப் பயன்படுத்தி துட்டகைமுனு எல்லாளனின் தலையை வெட்டி  விட்டான் . இதன் போது யுத்த விதிமுறைப்படி துட்டகைமுனுவின் நடவடிக்கை தவறு என்று நிரூபித்த போதிலும் எல்லாளன்  இறந்தமையால் துட்டகைமுனுவிடமே  அநுராதாபுரம் கொடுக்கப்பட்டது.  அதற்குப்  பின்னர் வெற்றி அடைந்த துட்கைமுனுவின் நண்பர்களை ஏராளமான தமிழ் பெண்கள் விரும்பி திருமணம் செய்தார்கள். தொடர்ந்து நிறையக் குழந்தைகளைப் பெற்றமையால் திடீரென சிறுபாண்மையாக.  இருந்த சிங்களவர்கள் பெரும்பாண்மையாக மாறினார்கள்.

இதற்குப் பின்னர் சோழர்கள் வாரிசு  வாரிசாக இந்தியாவில் மன்னர் ஆட்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆவர். இவர்களின் தேசியக்கொடி புலிக்கொடியாகும். இவர்களின் படைகளின் தொகை 12 லட்சத்திற்கு மேல் இருந்துள்ளது.  இவர்கள்  ஒவ்வொரு  நாடுகளையும் பிடித்து சைவக்கோயில் கட்டுவதிலே ஆர்வம் காட்டினார்கள்.   அதனால் ஆசியாவில்  உள்ள அனைத்து  நாடுகளையும்  பிடித்தார்கள். அங்கே சென்று  தங்களின்  சைவக்  கோயில்   கட்டுவதில் ஆர்வம் காட்டினார்கள்.  அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த  ஆசியாவில்  உள்ள  நாடுகள்   01. மலேசியா-  2.- தாய்லாந்து03  – இந்தோனிசியா 04-  இலங்கை 05- இந்தியா   இந்த நாடுகளைப் பிடித்து அங்கே தங்களின் கோயில்களைக் கட்டியதோடு இவர்களின் ஆட்சியே அனைத்து  நாடுகளிலும்  நடத்துள்ளது. அப்பொழுது  இலங்கையும்  இவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள்  இருந்துள்ளது.   பின்னர் அரசர்களுக்குள்  ஏற்பட்ட  உள் முரண்பாடுகளால் அப்படைகள் அழிக்கப்பட்டு பல மொழிகளாக சிதறுண்டிருக்கும்  இந்தியாதான்  அந்த நாடு.

இது இப்படி நடந்துகொண்டு இருக்க வெளிநாடுகளில் உள்ள ஐரோபியர்கள் ஆயுத ரீதியாக வளர்ச்சி அடைந்து கொண்டு வந்தார்கள். அதனால் தங்களின் ஆயுதங்களை வைத்து சிறிய நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற மனோநிலை அவர்களுக்கு  ஏற்பட்டது.

1505 ஆம் ஆண்டு  போத்துக்கேயர்கள் இலங்கையைப் பிடித்ததும் யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர் படைகளே இவர்களிற்கு எதிராகச் சண்டையிட்டதினால் நிறைய தமிழ் ஆண்கள்  கொல்லப்பட்டார்கள். ஆனால் அநுராதபுரத்தில் வாழ்ந்த சிங்களவர்கள்  இவர்களோடு  சண்டை பிடிக்காமல்  சாமாதானமாகப் போனார்கள். அதனால் அவர்களிற்கு உயிர் இழப்பு ஏற்படவில்லை.  இவர்கள் 1658 ஆம் ஆண்டு வரை ஆதாவது  153 வருடங்கள் வரை இலங்கை ஆண்டார்கள்.  ஆனால் இலங்கையில் வாழ்ந்த அநுராதபுரம், யாழ்ப்பாணம் , வன்னி  ஆட்சிகளை அழிக்கவில்லை. ஆனால்அதிகாரம் செலுத்தினார்கள்.

 இது நடந்து கொண்டேயிருக்க 1658 ஆண்டு ஒல்லாந்தர் பாரிய படையெடுப்  பொன்றை இலங்கை மீது மேற்கொண்டனர்.   போத்துக்கீசர் படைகளிற்கும்; ஒல்லாந்தர் படைகளிற்கும் ; கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் கணிசமான போத்துக்கீசர் படைகள் கொல்லப்பட்டனர்.  அடுத்து ஒல்லாந்தப் படைகள் இலங்கையைப் பிடித்துக்கொண்டனர்.  1796 வரை இலங்கையை ஆண்டார்கள். அதாவது 138 வருடம் இவர்களின் அதிகாரம் இருந்தது.  இவர்களும் மன்னர் ஆட்சிகளை அழிக்கவும் இல்லை, இணைக்கவும் இல்லை, அதிகாரம் மட்டுமே செலுத்தினார்கள். இவர்கள் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற இடங்களில் கோட்டைகளைக்  கட்டி தங்களின் வீரர்களைப் பாதுகாத்தார்கள். இவர்களோடும் அநுராத புரத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் சண்டையிட விரும்பவில்லை சமாதானமாகப் போனார்கள். ஆனால் தமிழர் படை தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே  இருந்தது. 

இது நடந்து  கொண்டேயிருக்க 1796 ஆம் ஆண்டு இலங்கை மீது பாரிய படை எடுப்பொன்றை  இங்கிலாந்து அரசு மேற்கொண்டது.  ஒல்லாந்தர் படைக்கும் இங்கிலாந்து  படைக்கும் கடுமையான சண்டை நடைபெற்றது.  கணிசமான படைகளை இழந்து சில குறிப்பிட்ட படைகளோடு  ஓடித்தப்பியது ஒல்லாந்தர் படை .அடுத்து  இங்கிலாந்து அரசியின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்  இலங்கை வந்தது.  அப்பொழுது தமிழ் மன்னர்களில் கடைசி  மன்னனான பண்டாரவன்னியன் வன்னியை ஆண்டான். சங்கிலி மன்னன் யாழ்ப்பாணத்தை  ஆண்டான். ஆனால் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான சண்டை நடந்தது.  தமிழர் படைகளிற்கும்; இங்கிலாந்தும் படைக்கும்; இதில் பண்டாரவன்னியன் இங்கிலாந்து படையோடு சண்டையிட்டு தங்களின் பீரங்கி ஒன்றை கச்சிலைமடு பிரதேசத்தில்  கைப்பற்றிச்  சென்றதாக “டோன்புறு” தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். திடீரென பாய்ந்து வருவார்கள் எனவும்; ஈட்டி போன்ற ஆயுதங்களை தங்கள் மீது ஏவுவார்கள் எனவும்; தாங்கள் செத்து விழுந்ததாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 அடுத்துச் சங்கிலியன் மன்னன்” எவரும் கிறிஸ்தவ மதத்தை பின்ற்ற வேண்டாம்” என சொல்லி இருந்த போதிலும் மன்னாரில் கட்டுப்பாட்டை மீறிப்  பலர் அம் மதத்தை பின்  பற்றியமையால் கோபம் அடைந்த சங்கிலியன் மன்னன் தனது வீரர்களை அனுப்பி 600 பொதுமக்களை வெட்டிக் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் வெள்ளையர்களிற்கு எதிராக பல தாக்குதலை செய்துள்ளான். அதனால் இவன் காட்டிக் கொடுக்கப்பட்டு இங்கிலாந்துப் படைகள் இவனைப் சிறைப்பிடித்து இந்தியாவிற்குப் கொண்டு போய் அங்கே வைத்து இவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். இது இப்படி நடந்து கொண்டேயிருக்க  அநுராதபுரத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் இவர்களோடும் சண்டையிட விரும்வில்லை சமாதானமாகப் போனார்கள். ஆனால் இவர்கள் இலங்கையினுடையே அனைத்து வரலாறுகளிலும் அன்னிப்படைகள் இலங்கையைப்பிடித்தபோதல்லாம் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவேயிருந்துள்ளனர்,

ஆனால் ஆங்கிலயர்கள் செய்த கொடுமை; தமிழ் மன்னர்கள் அனைவரையும் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் மூன்று சிறிய அரசாக இருந்த இலங்கையை தங்களின் நிர்வாகச் சுகத்திற்காக அவர்களின் நிர்வாகங்களை முற்றாக அழித்து ஒரே இலங்கை என்ற நாட்டை உருவாக்கினார்கள்.  அடுத்து இந்தியாவில் இருந்து கணிசமான தமிழர்களை இலங்கைக்கு  கொண்டு வந்து தேயிலைத் தோட்டங்களையும்;  ரப்பர் தோட்டங்களையும்;  உருவாக்கி குறைந்த சம்பளம் அவர்களிற்கு  வழங்கினார்கள். இவர்கள் 152 வருடங்கள் இலங்கையை ஆண்டுள்ளனர்.

மொத்த அந்நியர் ஆட்சி  போத்துக்கீசர்153 வருடம்; ஒல்லாந்தர்138 வருடம்; இங்கிலாந்து 152 வருடம்; மொத்தம் 443 வருடங்கள் ஆகும் . இது இப்படி இருக்க சுபாஸ் சந்திரபோஸ்  போன்றவர்கள் கடைசிப் பகுதியில் வெள்ளையர்களிற்கு எதிராக கடுமையான சண்டையிட்டுக் கொண்டேயிருந்த   காரணத்தால்    இந்தியவைவிட  வேண்டிய  துர்ப்பாக்கிய நிலை இங்கிலாந்திற்கு  ஏற்பட்டது. அதே காலம் மகாத்மா காந்தியும்  இந்தியாவை விடுமாறு உண்ணாவிரதம் இருந்தார். அதனால் சந்திரப்போஸ் போன்ற குழுவினரின் கையில் நாட்டைக் கொடுக்கக்கூடாது எனவும்; காந்தியிடம் இந்தியவைக் கொடுத்தால் பிற்காலத்தில் இங்லாந்து நாட்டிற்கு நண்பராயிருப்பார் என்ற  தூர நோக்கத்தோடு மகத்மா காந்தியிடம் இந்தியாவைக் கொடுக்க இங்கிலாந்து  முன் வந்தது.  அதனால் அயல்  நாடான இலங்கையையும் கொடுப்பதற்கு  இங்கிலாந்து முன்வந்தது.  அது தொடர்பாக  தமிழர்களையும், சிங்களவர்களையும் இங்கிலாந்து அரச தலைவர்கள் கூப்பிட்டு  தமிழர்கள் நீங்கள் வாழும் வட கிழக்கை வைத்துக் கொள்ளுங்கோ! சிங்களவர்கள் நீங்கள் வாழும் தெற்குப் பகுதியை வைத்துக் கொள்ளுங்கோ என சொன்னதாகவும்; அதற்கு தமிழர்களோ ” நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்” அதனால் சண்டை வராது எனச் சொல்லியுள்ளனர்.  அதன்போது நாட்டை சிங்களர்கள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் போனார்கள்.

தொடரும்

Share:

1 thought on “A 595தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு.. தமிழீழக்கதை பாகம்01”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *