பொதுவாக எல்லோருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது. தலைமுடி நீளமாக இல்லாவிட்டாலும் அதை அடர்த்தியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த வகையில் தலைமுடியை அடர்த்தியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தியால் நல்ல பலன் கிடைக்கும்.
எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆசை தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது தான்.

இமற்காக இந்த பதிவில் தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து போட்டால் முடி இருமடங்கு வேகத்தில் வளரும் அது என்ன பொருள் என்பதை ந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி
தலைமுடிக்கு என்னதான் நிறைய பராமரிப்பை செய்தாலும் ரத்த ஓட்டம் அவசியம் தேவைப்படுகின்றது. இதற்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும்.

இந்த தேங்காய் எண்ணெயில் படிகாரத்தை கலந்து பூசுவது அவசியம்.படிகாரம் சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. படிகாரத்தை பயன்படுத்தினால் முடியை நீண்ட நேரம் பளபளப்பாக வைத்திருக்கும்.
இதனை உச்சந்தலையில் தடவினால் முடி வலுவடையும். முடி உதிர்வைக் குறைக்கிறது. இதில் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளதால் முடியை பலப்படுத்த உதவுகிறது.

இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து தடவினால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும். இந்த படிகாரப்பயன்பாட்டை தான் கேரளப்பெண்கள் பின்பற்றி வருகின்றனர்.
இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை சிறிது தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 1/2 டீஸ்பூன் படிகாரத் தூள் சேர்க்கவும்.அதன் பிறகு இந்த இரண்டு பொருட்களையும் குறைந்த தீயில் வைத்து காய்ச்ச வேண்டும் எண்ணெய் நங்கு சூடு வந்தது எடுத்து ஆறவிடவும்.

பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதை உச்சந்தலையில் பூசி நன்றாக மசாஸ் செய்ய வேண்டும். இதை வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும்