வடக்கில் அகற்றப்பட்டும் இராணுவ முகாம்கள்… கடும் கரிசனை வெளியிட்ட நாமல் ராஜபக்ச!

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அண்மையில் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கடும் கரிசனை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் அகற்றப்பட்டும் இராணுவ முகாம்கள்... கடும் கரிசனை வெளியிட்ட நாமல் ராஜபக்ச! | Namal Expressed Concern Army Camp Removel In North

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுமக்களிடம் மீள நிலங்களை ஒப்படைப்பது பொதுவாக பிரச்சினைக்குரிய விடயம் இல்லை என்றாலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அகற்றப்பட்டும் இராணுவ முகாம்கள்... கடும் கரிசனை வெளியிட்ட நாமல் ராஜபக்ச! | Namal Expressed Concern Army Camp Removel In North

 இலங்கை 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டது ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து சமூகத்தினரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு தெற்கு என எந்த பகுதியாகயிருந்தாலும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *