பகல் கணவு காணும் ரணில்: அநுர தரப்பு சாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி மூன்று மாத காலங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியாக வழக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலதிகமாக அவர்களுக்கு எதனையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.

டொலரின் பெறுமதி

தற்போதைய அரசாங்கத்தால் ஆட்சி நடாத்த முடியாது என ரணில் பகல் கனவு காண்கிறார். இதற்கு முன்னரும் அவர் பகல் கனவுகளை கண்டார். டொலரின் பெறுமதி 400 ரூபா வரை உயர்வடையும் என்றெல்லாம் கூறினார்.

பகல் கணவு காணும் ரணில்: அநுர தரப்பு சாடல் | Vijitha Herath Criticizes Ranil

ஆனால், இன்று டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளது. எனினும், கனவு காணும் உரிமை அவருக்கு உள்ளது. அவர் நன்றாக கனவு காணட்டும்.

பகல் கணவு காணும் ரணில்: அநுர தரப்பு சாடல் | Vijitha Herath Criticizes Ranil

இதேவேளை, மற்றொரு புறம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறும் நகைச்சுவையான கருத்துக்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *