தியாகி திலீபன் அவர்களது 37ம் ஆண்டு நினைவு நிகழ்வு பேனகம் சமூக மண்டபத்தில் 26/09/2024 அன்று உணர்பூர்வமாக  நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு – தெற்கு அவுஸ்ரேலியா அமைப்பால் சிறப்பாக ஒருங்கிணைத்து நடாத்தப்பட்டது. 

இதில் இலங்கை தமிழ்ச்சங்கம் தெற்கு அவுஸ்ரேலியா, மக்கள் நலன் காப்பகம் அவுஸ்ரேலியா, அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலை நடுவம்  ஆகிய அமைப்புக்களை ஒன்றிணைத்து இவ்வாண்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 

பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில்,  பொதுச்சுடரினை அமைப்பின் அங்கத்தவரான திரு. சசிகுமார் முருகமூர்த்தி அவர்கள் ஏற்றிவைக்க அவுஸ்ரேலிய தேசியக்கொடியினை மக்கள் நலன் காப்பக தலைவர் திரு. சிர்நிவாசம் குருசாமி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்ரேலிய பழங்குடியினர் கொடியினை இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜெயசாகரன் புண்ணியமூர்த்தி ஏற்றிவைத்தார்.

தமிழீழ தேசியக்கொடியினை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. வையாபுரி சுதாகரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை திரு. ஜெயசாந்தன் விநாயகமூர்த்தி அவர்கள் ஏற்றிவைக்க, திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை திருமதி. பாஸ்கரன் அனுஷா அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களது திருவுருவப்படத்நிற்கான ஈகைச்சுடரினை திரு. சூரியகுமார் வில்வரெட்ணம் ஏற்றிவைக்க, அவரது திருவுருவப்படத்தற்கான மலர்மாலைநினை திரு.புவனரூபன் சீனிவசகம் அணிவித்தார். 

தொடர்ந்து  மலர்வணக்கம் நடைபெற்று அகவணக்கத்துடன் மேடை நிகழ்வுகள் ஆரம்பமானது. அதில் தமிழீழ பொது அறிவுப்போட்டியில் சித்திபெற்ற சிறார்களுக்கான் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இறுதியாக கொடியிறக்கத்துடன் சிற்றுண்டி மற்றும் தேனீர் வழங்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றது.

sa%20(8)
sa%20(9)
sa%20(10)
sa%20(11)
sa%20(1)
sa%20(37)
sa%20(38)
sa%20(2)
sa%20(3)
sa%20(4)
sa%20(5)
sa%20(6)
sa%20(7)
sa%20(13)
sa%20(15)
sa%20(16)
sa%20(17)
sa%20(14)
sa%20(3)
sa%20(18)
sa%20(19)
sa%20(20)
sa%20(21)
sa%20(22)
sa%20(23)
sa%20(24)
sa%20(25)
sa%20(26)
sa%20(27)
sa%20(28)
sa%20(29)
sa%20(30)
sa%20(31)
sa%20(32)
sa%20(33)
sa%20(34)
sa%20(35)
sa%20(36)
sa%20(4)
sa%20(5)
sa%20(7)
sa%20(1)
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *