எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, மட்டக்களப்பில் முதலாவது அரசியல் கட்சி இன்றையதினம் (07) நண்பகல் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்தது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று தனது நியமன பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இதேவேளை, இன்றையதினம் வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி திருமதி ஜே.ஜே முரளிதரன் தெரிவித்தார்.