கனடாவில் (Canada) ஈழத்தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது  ஸ்காபரோ Ellesmere and Orton Park பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 54 வயதுடைய துஷி லக்ஷ்மணன் என்ற பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பெண்

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 50 வயதான ராகுலன் லக்ஷ்மணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி | Jaffna Woman Killed In Canada

இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்  உயிரிழந்த பெண்ணின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொலைக்கான காரணம் வெளியாகவில்லையெனவும் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *