துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம்.

கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும்.

துளசி தீர்த்தம் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம் மற்றும் துளசியை சேர்க்க வேண்டும். மேலும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காயும் இடம் பெறுவது அவசியம்.

துளசி செடி

பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையி லும், விரல் நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை. துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

துளசி செடியை வளர்த்து வழிபடுவதால் என்ன நடக்கும் தெரியுமா...? | Vastu Tips Spiritual Benefits Of Tulsi Plant

தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கலாம்.

கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம்.

வாஸ்து சாஸ்திரம் 

விநாயகர், சக்திதேவி, சிவனுக்குப் போடாமல் தவிர்க்கலாம்.பச்சையும், சிறிது வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம்.

துளசி செடியை வளர்த்து வழிபடுவதால் என்ன நடக்கும் தெரியுமா...? | Vastu Tips Spiritual Benefits Of Tulsi Plant

இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது. சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திரக் கருத்து.

துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும்

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *