சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மீன்கள் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் கூலர்ரக வாகனத்தில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவினை ஏற்றிக்கொண்டிருந்த மூவரை சாவகச்சேரி பொலிஸார்  நேற்று (30) இரவு கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரியின்  வழிகாட்டலில் விசேட அதிரடிப்படையினரின் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

யாழில் லொறியொன்றில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஆபத்தான பொருள் | Large Quantity Of Dangerous Goods Seized In Jaffna

இதன்போது கூலர் ரக வாகனத்துடன் 20 மில்லியன் பெறுமதியான 96 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் வவுனியாவை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மூவரும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *