மியன்மாரை(myanmar) தொடர்ந்து பசிபிக் தீவு நாடான டோங்காவில்(tonga) ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் என்ற அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்படுள்ளது

இலங்கை நேரம் இன்று(30) மாலை 5.48 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களை உயரமான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை 

ஹோலேவா மற்றும் நுகுஅலோபா உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், குடியிருப்பாளர்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்

டோங்கா என்பது பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு. இது 171 தீவுகளைக் கொண்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, அவர்களில் பெரும்பாலானோர் டோங்காடபுவின் முக்கிய தீவில் வசிக்கின்றனர்.

வெளிநாடொன்றில் இன்று மாலை பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு | Earthquake Near Tonga Island

இது அவுஸ்திரேலியாவின்(australia) கிழக்கு கடற்கரையிலிருந்து 3,500 கிலோமீட்டர் (2,000 மைல்கள்) தொலைவில் உள்ளது. இந்த தீவில், தலைநகர் நுகுஅலோபாவிலிருந்து 200 கி.மீ., தொலைவில், 10 கி.மீ., ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *