முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் காரணமாக இலங்கைப் பெண் ஒருவருக்கு நியூசிலாந்து புகலிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இலங்கையில் உள்ள அவரது முன்னாள் காதலி ஒரு இராணுவ சேவை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஓரின சேர்க்கையாளரான இருவரும் 2011ஆம் ஆண்டு முதல் இரகசியமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இலங்கையில் முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் ; நியூசிலாந்தில் வழங்கியுள்ள புகலிடம் | Ex Girlfriend S Death Threat Sri Lanka New Zealand

2017 ஆம் ஆண்டில், அந்தப் பெண்ணின் தாய் அதைப் பற்றி அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவருடைய பெற்றோர் இந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மூன்று இராணுவ அதிகாரிகளுடன் தனது வீட்டிற்கு சென்ற காதலி, குறித்த பெண்ணின் தாயாரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்.

இலங்கையில் முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் ; நியூசிலாந்தில் வழங்கியுள்ள புகலிடம் | Ex Girlfriend S Death Threat Sri Lanka New Zealand

மேலும், சம்பவத்தை எதிர்கொண்ட பெண் தனது முன்னாள் காதலியிடமிருந்து தப்பிக்க நியூசிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இதன் காரணமாக கல்வி நோக்கங்களுக்காக புகலிடம் கோரியுள்ளார்.

எனினும் முன்னாள் காதலியின் கொலை மிரட்டல் காரணமாக அவருக்கு நியூசிலாந்து புகலிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *