தமிழீழக்கதைTamil Eelam of story

பாகம் ஒன்றின் மூன்றாவது தொடர்

1971 காலப்பகுதியில் தேசத்தின் குரல் பால அண்ணை அனைத்து இயக்களையும் சேர்ந்த இளைஞர்களையும் தான் லண்டனில் கூப்பிட்டு தமிழீழப் போராட்டம் தொடர்வாகப்பாடம் படிபித்ததாகவும்

அதில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகளின் ஒரு உறுப்பினர் அன்ரன் மட்டுமே தங்களின் அமைப்பின் கொள்கையை ஆணித்தரமாகச் சொன்னதாகவும், அமைப்பின் சுய ஒழுக்கம்பற்றியும் அவர் குறிப்பட்டதாகவும் திருமதி அடல் அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,அன்ரன் பாலசிங்கத்திற்கும் அன்ரனை பிடித்தது ஆனால் அன்ரனுக்கும் பாலசிங்கத்தையும் அன்றியையும் நல்லாகப்பிடித்தது

, இருந்தும் 1972 ஆண்டஅரசுக்கு எதிராக தலைவர் தனது முதலாவது நடவடிக்கையைவெற்றிகரமாகச் செய்துள்ளார்,

இனித் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆயுதப் போராட்டத்திற்கு வருவோம்,

 இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும்,

பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். இவருக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர்.வேலுப்பிள்ளை இலங்கை அரசின் நில அழவையாளராகக் கடமை ஆற்றியவர்      அதனால் உத்தியோக வேலைகளில் பணி நிமிர்த்தம் காரணமாக மட்டு அரசடி என்ற இடத்தில் வேலிப்பிள்ளை குடும்பம் கனிசமான காலம் அங்கே வாழ்ந்துள்ளனர்.

அங்கே தான் ஆரம்பக்  கல்வியைத்தான் தொடர்ந்ததாகவும் அங்கே வாழ்ந்த காலத்தில்அன்னமுன்னாப்பழம் தான் நிறையச் சாப்பிடுவதாகவும் . தலைவர் எம்மிடம் குறிப்பிட்டார், அங்கு இருந்து வல்வெட்டித்துறை வந்த இவர்களின் குடும்பம் பின்னர் ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பராக் கல்லூரியில் 8ம்  வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். அவரைப்படிப்பித்த ஆசிரியரின் பெயர் வேணுகோபால் ஆகும்

கடந்த 1956ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.அதேகாலப்பகுதியில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் ஒரு குடும்பம் இடம் பெயர்ந்து தலைவரின் வல்வெட்டித்துறை விட்டிற்கு அருகாமையில் இருந்ததாகவும் அந்த வீட்டில் இருந்த பெண் ஒரு வரின் முகம் எரிந்தநிலையில் இருந்ததாகவும் அதை தலைவர் தனது தாய்யிடம் கேட்டு அறிந்துள்ளார்,அந்த முதுமையான பெண்மணியின் அழுகுரலே அந்தச் சிறுவனின் மனதை இந்த நிலைக்கு மாற்றியதாக அயலவர்கள் குறிப்பிடுகின்றார்கள்,

அதனால் போராட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் குடிகொண்டது


தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீஸார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்குப் புரிந்தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார்தான் தன்னைத் தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் திடீரென புத்திசாலித்தனமாகத் தப்பிவிட்டார்.

பிரபாகரனைத் தேடிச்சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, “உங்களுக்கோ குடும்பத்துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம் என்போக்கில் விட்டு விடுங்கள் என்னை எதிர்பார்க்காதீர்கள்’”என்று கூறி வீட்டை விட்டு வெளியே சென்று தனது கடமையை ஆரம்பித்தார்,

அன்றைய சிறுவனாய் இன்றைய தலைவனாய் எங்கள் தலைவர்.
அக்காலப்பகுதியில் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர் நடவடிக்கைகளைச்செய்யவேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்களால் வகுப்புகள் நடந்துகொண்டுயிருந்தன. ஆனால் இதற்கு தொடர்ச்சியாக பிரபாகரன் பங்குபற்றுவார். இருந்தும்

தான் சிறுவனாகத்தான் இருந்தமையால் ஒரு முறையாவது சிவகுமாரனோ அல்லது அவர்களின் முக்கிய உறுப்பினர்களோ தன்னோடு தனிப்பட்ட ரீதியில் கதைக்கவில்லையெனவும் இப்படியானவர்கள் எப்படி திறமையானவர்களை இனங்காண முடியும் என தான் மனதுக்குள் நினைத்தாகவும் தலைவர் எம்மிடம் அவர்களின் செயல்பாடு தொடர்பாகக் கதைக்கும்போது குறிப்பிட்டார்? ஆனால் தொடர்ந்து வகுப்பு மட்டுமே நடந்தன, எவரும் வண்முறைகளில் ஈடுபடுவதாகத்தெரியவில்லைஅதனால் தானே செய்ய முடிவு எடுத்தார்,1972 ஆம் ஆண்டு இலங்கை சிறிலங்கா என்ற பெளத்த நாடாக பேர் மாற்றப்பட்டது,

இதன் வெளிப்பாடு தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன,, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் வட கிழக்கு தமிழர் தாயகப்பகுதி எங்கும் நடைபெற்றது,இதே காலப்பகுதியில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசோடு கடுமையாக மோதிக்கொண்டுயிருந்தார்கள், அதற்கு பதிலாக புதிய புதிய தமிழர்களிற்கு எதிரான சட்டங்களையும் சிங்கள அரசு அமுல்படுத்திக் கொண்டுயிருந்தது,

22/05/1972 புதிய அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதோடு தந்தை செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனமா செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

,22/05 /1972 அன்று தமிழ் மக்களின் ஆரம்பகாலம் முதல் இருந்து வந்த அரை குறைப்பாதுகாப்புச்சட்டங்களைக்கூட அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்கி தமிழ் மக்களிற்கு எவ்வித உரிமையும் இல்லாமல் தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜை ஆக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.

  இலங்கையைஅரசாங்கம் சிங்களப்பௌத்த நடாகப்பிரகடனப்படுத்தினார்கள். இந்த அரசியலமைப்பை தயாரிக்கவென தமிழர் தரப்பில் இருந்து எவ்விதமான ஆலோசனைகளும் பெறுவதற்கு அவர்கள் விரும்பவில்லை.

 தமிழர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களும் நிராகரிக்கப்பட்டது, பின்னர் தமிழர்களே இல்லாத சட்டசபைகளை உருவாக்கியது சிங்கள அரசாங்கம் இதேகாலப்பகுதியில்தான்அன்று சத்தியசீலனின்தலைமையில்தமிழ் பேரவை இயங்கிக்கொண்டுயிருந்தது .இவரின் செயல்பாட்டை ஏற்றவர்களில் பொன் சிவகுமரன் உட்பட தலைவர் பிரபகரனின் நண்பர்களும் அடங்குவர்.தலைவர்,சத்தியசீலன் மற்றும் வல்வெட்டித்துறை இளைஞகள் மூவர் மொத்தம் ஐந்து பேர் சாவகச்சேரியில் நின்ற அரசாங்க பேருந்தை மறித்து அதில் இருந்த மக்களை வெளியேற்றினார்கள். இது நடந்துகொண்டுயிருக்க பிரபாகரனின் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த 3 நண்பர்களும் அவ் இடத்தில் இருந்து ஓடி விட்டார்கள்.

இதை அவதானித்த தலைவராகச் சென்ற சத்தீயசீலனிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றார்…..இதைக் கவனித்த தலைவர் பிரபாகரன் சத்திய சீலனிடம் இருந்த குண்டைப்பறித்து பஸ்ஸில் எறிந்தார்.அது பேரோசையோடு வெடித்தது .அதையடுத்து  நெருப்பை தட்டி வைத்து பஸ்சை எரித்தார்.அதன் பின்னர்புத்திசாலியான தலைவர் பிரபாகரன் வல்வெட்டிதுறையில் இருந்துவேறு இடம் சென்று தலைமறைவாக வாழ்ந்தார்.இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் முழுக்க கடுமையான சோதனை நடத்திய பொலிஸார் தலைவர் சத்தியசீலனைக்கைதுசெய்து கடுமையான அடிகொடுத்தபின்னர் நிருபராதி என விடுதலைசெய்தனர்.

ஆனால் அனைத்து குற்றத்தையும் பிபாகரன் மீது போட்டது சிங்கள அரசு அதனால்அரசால் அவர் தேடப்படும்பட்டியலில் இருந்தார். அக்காலத்தில் செல்லக்கிளி அம்மானின் தம்பி செட்டி சிறிலங்கா ஜெயிலில் இருந்து தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்றார்.அப்பொழுது குண்டிமணி.தங்கத்துரை ஜெகன் போன்றவர்கள் தமிழ்நாட்டிலே இருந்தார்கள்

தமிழீழத்தில் சிறு சிறு வண்முறைகளை அரசிக்கு எதிராகச் செய்துகொண்டும் வந்ததலைவர் செட்டி உட்பட தனக்கு நம்பிக்கையானவர்களை வைத்து தனது அமைப்புக்கு புதிய புலிகள் என1972ம்ஆண்டு பெயர் வைத்தார்.

ஐயர் செட்டிபோன்ற முதல்தர சில குறிப்பிட்ட பேராளிகளை வைத்து தனது அமைப்பிற்கு  புதிய புலிகள் என பெயர்

வைத்தார்தலைவர்.பிரபாகரன்அன்றில் இருந்து தங்களால் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளிற்கும் புதிய தமிழ் புலிகள் என உருமை கோரினார்கள் 

அது மட்டும் அல்ல தாங்கள் எங்கே சென்று தாக்குதல் நடத்தினாலும் சரி; அல்லது யாரும் தேசத் துரோகிகளிற்கு சாவொறுப்பு வழங்கினாலும்  சரி; தங்களின் புலி சின்னத்தை அவ்விடத்தில் ஒட்டி விட்டுவருவது; அல்லது அவ் இடத்தில் வைத்துவிட்டு வருவது; போன்ற நடைமுறையை தொடர்ந்து அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். 80 திற்குப் பிற்பட்ட காலத்திலே அழகான புலிக்கொடியொன்றை தங்களின் அமைப்பிற்காக அவர்கள் வரைந்து எடுத்தார்கள்.

.

தலைவருக்கு கரிகாலன் என்ற பெயர் ஏன் வந்தது?தலைவரை மூத்த போராளிகள் தம்பி என்ற அளைப்பார்கள்,

இதே காலப் பகுதியில்தான் அரசிற்கெதிரான ஆர்பாட்டங்கள் அமைதிவழிப் போராட்டங்கள் நடைபெற்ற காலம்

அது, இன்னொரு பக்கம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான வேலைகளை செய்துகொண்டுயிருந்தார்கள்.அதன் முதல் கட்டமாக இதே ஆண்டு வல்வெட்டுத்துறைக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள நிக்குளுவைரவர் கோயிலடியில் சின்னச்சோதி, நடேஸ் தம்பி என்னும் சில நன்பர்களுடன் இனைந்து கைக்குண்டு ஒன்றைத்தாயாரித்துக்கொண்டுயிருந்தார்கள். 

அது நடந்துகொண்டிருக்கும் வேளையில் அருகில் இருந்த பனை மரத்தில் ஒரு பனம்பழம் அவர்களின் வெடி மருந்திற்க்கு மேலே விழுந்ததினால் அவ்வெடி மருந்து வெடித்து தம்பியின் காலில் காயம் ஏற்பட்டது, அதன் காரணமாகபிறகு கரிகாலன் என்ற பெயர் தம்பிக்கு வரக் காரணமாயிருந்தது, அதனால் இளைஞர்கள் பிரபாகரனை கரிக்காலன் என குறிப்பிட்டார்கள்,.அதே காலப்பகுதியில் செல்லக்கிளி அம்மானை எமது இயக்கத்தில் இணைத்த செல்லக்கிளி அம்மானின் தம்பியான செட்டி அவர்களின் நடவடிக்கை தவறாக இருந்த காரணத்தால் அவரின் தொடர்பை தலைவர் பிரபாகரன் முற்றாக துண்டித்துவிடுகின்றார்.

அக்காலப்பகுதியில் புதிதாக வாத்திநாராயணன் மற்றும் பற்குணம் இவர்களைச்சந்தித்து இவர்களையும்  தனது அமைப்பில் இணைத்துக்கொள்கின்றார் தலைவர்.

 1973 இக்காலப்பகுதியில்தான் தமிழர்களிற்கு எதிராக சிங்கள அரசு கடுமையான வன்முறைகளை மேற்கொண்டது,

தமிழர்களிற்கான அரச வேலை ,கல்வி என்பன சிக்கள அரசால்

முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன, இந்நிலையில் 1973 தமிழ்

தலைவர்களான அக்கால இளைஞர்களான மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனத்தன் உட்பட 42 பேர் அரசிக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இவர்கள் அனைவரும் அரசபடைகளால் கைது செய்து ஜெயிலில்அடைத்தது சிங்களஅரசு .ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவர்களின் அரசியல்

வேலையைத் தொடர்ந்து செய்தார்கள், ஆரம்ப காலத்தில் தமிழன் கனவு என பல நூல்களை எழுதியதோடு மட்டும் இன்றி உணர்ச்சிப் பாடல்களை எழுதி தமிழீழ இளைஞர் யுவதிகளிடையே பெரும் போராட்ட உணர்வை ஏற்படுத்தி இறுதி வரை தேசியத் தலைவரிக்கு துணையாக நின்றவர் காசி ஆனந்தன்.

இது இப்படி இருக்க இவரின் தம்பி 1983 எமது அமைப்பில் இணைந்து மட்டு அம்பாறை நிதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர்,இயக்கப் பெயர் மேஜர் வள்ளுவன் / சந்திரன் அமிர்தகளி மட்டு (பிறப்பு19/02/1945)வீரச்சாவு

10/09/1988 மட்டு தாளங்குடாப்பகுதியில் இந்தியா இராணுவத்தின் முற்றுகையின் போது சைனட் உட்கொண்டு வீரச்சாவு அடைந்தார்,


இதே காலத்தில் சிங்களவர்களின் கொலைவெறியை நேரில் பார்த்த அனுபவத்தை திருமதி கமலினி குறிப்பிட்டார்,
1974 ஐனவரி 3 தொடக்கம்10 த்துவரை உலகத் தமிழராச்சி மாநாடு யாழ்பாணத்தில் நடைபெற்றது அப்பொழுது, கரண்மரத்தை விழுத்தி 11 தமிழர்களைகொலை செய்தமைக்காக காவல் துறை அதிகாரியான சந்திரசேகராவிற்கு பதவி உயிர்வு வழங்கப்பட்டதுஅதிபர் சிறிமா அவர்களால்,
அதில், எங்கள் குடும்ப நண்பர் செல்வன் ராஜன் 23 என்பவர் மின்சாரக் கம்பிகளிற்குள் விழுந்தவர்களைக் காப்பாற்றச் சென்றபோது காவல் துறை வாகனத்தால் ஏற்றப்பட்டு துடிதுடிக்க மரணமானார், இதை நேரில் பார்த்தேன்,என அவர் குறிப்டார்

இதே காலம் தலைவர் இந்தியா சென்று திரும்பினார்.

இதே காலப்பகுதி தம்பி இந்தியா செல்கின்றார் ஏற்கனவே சென்று இருந்த சின்னச்சோதி மற்றும் நடேசும் தம்பியை வரவேற்கின்றார்கள், இக்காலப் பகுதியில் படகோட்டிகள் எவரும்

இருக்கவில்லை.வல்வெட்டித்துறைமக்களின் உதவியுடன் ஆறு குதிரைச்சத்தி Horsepower கொண்ட நண்பர் ஒருவரின் உதவியுடன் தம்பி வேதாரணியம் போய்ச்சேர்த்தார்,இந்தியா போய்ச் சேர்ந்த காலத்தில் எவ்வித உதவியும் இன்றி தம்பி கடுமையாகக்கஷ்ட்டப்பட்டார்,  சின்னச்சோதி ,நடேஸ் போன்றவர்கள் தாங்கள் தங்குமிடத்தை வசந்தமாளிகை என நக்கலாகச் சொல்வார்கள், அக்காலபகுதியில் சிங்கள அரசால் தேடப்படுபவர்கள் இந்தியா சென்றால் ஐனார்த்தனம் போன்ற தமிழ் உணர்வாளர்கள் அமிர்தலிங்கம் போன்றவர்களின் அனுமதியுடன் சில உதவிகளை செய்வார்கள்,ஆனால் அவை போதிய அளவாகயிருக்காது  ……அதே ஆண்டு மீண்டும் தமிழீழம் வந்து சேர்ந்தார் தம்பி.
அப்பொழுது தலைவர் சத்தியசீலன் பஸ் எரித்த பிரச்சனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு விடுதலை ஆகி  யாழில்இருந்தார் .அதை அறிந்த பிரபாகரன்  சத்தியசீலனை  போய் சந்தித்தார். அவர் மீண்டும் செயல்படுவதாக எதுவும் கதைக்கவில்லை பயந்த சுபாபமாகக்காணப்பட்டார். அவரின்கதையை வைத்து இவர் எந்தச்செயல்பாடுகளிலும் ஈடுபடமாட்டார் என்பதை தலைவர் அறிந்து கொண்டார்.இந்திய இருந்து வந்ததும்



  தனது பெற்றோரைப்பார்க்க வேண்டும் என்ற நோக்கில் அயலூரானின் உதவியுடன் மிதிவண்டியில் அங்கே செல்கின்றார் தலைவர், அங்கே சென்று தாயுடன் கதைத்து விட்டு அவரிற்குத்தெரிகாமல் 4 சோடிக்காப்பை எடுத்துக்கொண்டு தம்பி மீண்டும் பழைய இடம் திரும்புகின்றார், இந்தக் காப்புக்களை விற்று இரண்டு 38 ரக கைத்துப்பாக்கிகளை தம்பி வேண்டினார்.அதற்கான ரவைகளை  கலாபதியின் உதவியுடன் தாங்களே செய்து சுட்டுப்பப்பயிற்சிகளை மேற்கொண்டார்கள், காலம் கடந்து எவரிலும் சந்தேகம் பட வேண்டாம் 4 சோடிக் காப்புக்களையும் தான்தான் எடுத்தேன் என்று கடிதம் எழுதிதாய்க்கு அனுப்பினார் தலைவர்.

05/06/1974 ஆம் ஆண்டுஅன்று காட்டிக்கொடுக்கப்பட்டுபட்டு பொன்சிவகுமரன் வீரச்சாவு அடைத்தார்.

ஆனால் பொன் சிவகுமாரனும் குறைந்த மாணவர்களை  வைத்து

துணிச்சலான சில  வேலைகளை செய்துகொண்டுயிருந்தார். ஆனால் பொன் சிவகுமாரன்05/06/1974 சொந்த ஊரான உரும்பிராய்ப் பகுதியில் வைத்து சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக்காட்டிக்கொடுக்கப்பட்டு முற்றுகையில் சிக்கிய சிவகுமாரன் உயிரோடு பிடிபட்டால் சித்திரவதை தாங்காமல் ஏனையவர்களையும் காட்டிக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்பதற்காக சைனட் உட்கொண்டு வீரச்சாவு அடைந்தார்.

அவர் வீச்சாவு அடைந்ததும் அவனின் கனவை நனவாக்க எவரும் செயல்படவிரும்புவதாகத்தெரியவில்லை.ஆனால் சிவகுமாரனோடு சேர்ந்து செயல்பட்டவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் சிவகுமாரனின் கனவை நனவாகக்கவோ, போராடவோ அல்லது சிவகுமாரனை காட்டிக் கொடுத்தவர்களை கொல்வதற்கோ எந்த முயற்சியும் செய்யவில்லை.அதனால்தான் போய் அவர்களிடம் சிவகுமரனின் விடுதலைப்ப்பயணத்தை தொடர்பவது தொடர்பாகக் கதைத்ததாகவும் ,அதற்கு அவர்கள் அதை விரும்பவில்லையெனவும் ஆனால் அவனின் இறந்த நிகழ்வை செய்வற்கு அவர்கள் ஆர்வம் காட்டியதாகவும், அதற்கு தான் அது சாதாறன மக்களின் கடமை அதை அவர்கள் செய்யட்டும் நாங்கள் அவனின் இலட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து போராடப்போவதாக அவர்களிடம் சொல்லிவிட்டு வந்ததாகவும், இதை 1993 யூதர்களின் தாயகம் நோக்கிய பயணம் படிப்பித்துக் காட்டும்போது தலைவர் எமதுக்குத் தெரியப்படுத்தினார்அதனால்தானே அக்கடமையை செய்வதற்கு முடிவு எடுத்தார் தலைவர்.

 1974 ஆண்டுமுதலாவது சாவொறுப்பைகருணாநிதி என்பவருக்கு தலைவரால் வழங்கப்பட்டது,

 அதனால் தமிழர்களால் தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.அதை உணர்ந்து கொண்ட தலைவர் முதல்முதலாக சிறிலங்கா அரசிக்கு

புலனாய்வாளராக செயல்பட்ட தமிழரான கருணாநிதியை 1974 ம் ஆண்டுகாங்கேசன் துறைவீதில் வைத்து தனது துப்பாக்கியால் சுட்டு அவரிற்கான சாவொறுப்பை வழங்கினார், அது தலைவரின் முதலாவது தாக்குதலாகும் . அவரைச்சுட்ட தலைவர் மையிலிட்டியில் தெரிந்த நண்பர்களின் வீட்டில் இரண்டு நாட்கள் தலைமறைவாகயிருந்தார், அதை அடுத்து புத்திசாலித்தனமாக வேறு இடம் பாதுகாப்பாகச் சென்றுள்ளார்,

16/09/1975 அன்று கல்விநிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பயணித்தபோது……

அதை அடுத்து பயணிகள் பஸ்சில் வெள்ளை வேட்டியோடு ஏறி

வல்வெட்டித்துறைக்கு சென்றுகொண்டுயிருந்தார், திடீரென இரண்டு பொலிஸார்  பஸ்சைமறித்து உள்ளே ஏறியதும் அவர்கள்  உமக்கு பிரபாகரனைத்தெரியுமா? என்று அவரிடமே கேட்டார்கள் . அவர் எந்தப் பதட்டமும் இல்லாமல் இல்லையென பதில் அளித்தார்,ஆனால் தம்பி சென்ற அதே பஸ்சில் தம்பியின் உடை மாதிரியே அணிந்து இருவர்பயணித்தார்கள் வாகனத்தில் இருந்த புலனாய்வாளர்கள் அவர்களையே கண்காணித்தவாறு சென்றார்கள்,

அது தம்பிக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது,வெள்ளைவேட்டி அரைக்கைச்சேட் இதைப் பார்த்ததும் அவர்கள் சந்தேகம்படவில்லை ஆனால் அந்த பஸ்சில் இருந்தவர்களிற்குப் பிரபாகரன் இவர் தான் என்பது தெரியும் . ஆனால் எவரும் காட்டிக்கொடுக்கவில்லை, புத்திசாலியான தலைவர் இடையில் தனது இடம் வந்து விட்டது என்று ஓட்டுனரிடம் சொல்லி இறங்கி சாலையோரமாக நடந்து சென்றார்,இப்படி பல சம்பவர்களில் மக்கள் அவரைப்பாதுகார்த்தவரலாறுகள் நிறையவ உள்ளது, 

1975 ஆண்டு தலைவரின் மிகவும் நம்பிக்கையான போராளி குலம் அவர்களையும்  தனது அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

1975 ஆம் ஆண்டு தலைவரின் குணம் பற்றி மூத்த போராளி குலம்

குறிப்பிடும்போது,தம்பியை நான் ஐயர் வீட்டில் வைத்து சந்தித்தேன் . நான் வணக்கம் என கூறியபோது தம்பி தலை குனிந்துகொண்டுயிருந்தார், தம்பியை நான் கண்ட போது 4 முழ வேட்டியுடன்  மேலும் வெள்ள சட்டையுடன் இருந்தார்,.தம்பி தேடப்படும் நபர் என ஐயர் எனக்கு அறிமுகப்படுத்தினார், நான் தையிட்டி கிராமத்திற்குச் சென்று இருந்த வேளை தம்பி தோட்டத்தில் பாத்தி கட்டுவதை அவதானித்தேன்,நானும் சேர்ந்து அவரிற்க்கு உதவி செய்வேன், என குலம் குறிப்பிட்டார்.

27/07/1975 அன்று வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் வைத்து தலைவர் அல்பிறேட்துரையப்பாவிற்கு சாவொறுப்பு வழங்கினார் . 

அடுத்த நடவடிக்கையாக யாழ் மேயராக  இருந்தஅல்பிறேட் துரையப்பா தமிழர்களின் விடுதலை இயக்கங்கங்களை முளையில் கிள்ளியெறியும் புத்தி கூர்மையான தமிழினத்துரோகி ஆவார். இவர் தமிழர்ஆராட்சி மாநாடு நடந்த போது அதைக்குழப்புவதற்கு அரசகைக்கூலியாக முன்னின்று செயல்பட்டவர், அதனால் பத்து தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை நாம் அறிந்ததே

இவரிற்கு கிட்ட எவரும் இலகுவாகநெருங்க முடியாது ,கிட்ட நெருங்கினால் தப்ப முடியாது, அப்படி பயங்கரத் துரோகியாகக் கணிக்கப்பட்டவர். இவரைக் கொல்வதற்கு புதிய புலிகளின் ஆரம்ப

உறுப்பினர்களான கலாபதி ,கிருபாகரன், தம்பி மூவரும் வதராஜப்பெருமாளின் கோயிலுக்கு பேருந்திலேசென்றார்கள், மதியம் 01,05 மணியலவில் மாவரைக்கும் தொழிற்சாலை உரிமையாளர் திருலோநாதன் ஆகியோருடன் ஆலயத்திற்கு வருகின்றார் துரையப்பா, அவரைக் கண்டதும் தம்பி குறிபார்த்து துரைப்பாவைச் சுடுகின்றார் ,

அடுத்து அவசரமாக TNT என எழுதுவதற்குப்பதிலாக TN என எழுதிப்போட்டுவிட்டு அவர் வந்த வாகனத்தில் மூவரும் வேகமாக தப்பிச் செல்கின்றார்கள் ……,.,
துரையப்பாவின் வாகனத்தில்தப்பிச்சென்ற  தம்பி மற்றும் கலபதி கிருபா   சாரதி  பற்றிக் ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக அதே வீதியில் வந்த காவல்துறைவாகனம் ஒன்றைச்சந்திக்கின்றனர் .

அந்தக் காலப்பகுதியில் யாழ் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆரியரட்ணா மனைவி பிள்ளைகளுடன் கீரிமலை கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு  திரும்பிவந்துகொண்டுயிருந்தார், அவ்வாகனத்தைக்கண்டதும் வாகனச் சாரதி பதட்டம் அடைந்ததால் வாகனம் குடை பிரண்டது.எல்லோரும் வாகனத்தை விட்டு இறங்கி சித்தங்கேணிபக்கமாக ஒடித்தப்பினார்கள்,
அல்பிறேட் துறையப்பாவின் தாக்குதலிற்குப்பின்னர் இவர்களின் உறுப்பினரான கலாபதி சிங்களப்பொலிசாரால் காட்டிக்கொடுகப்பட்டு  பிடிபட்டார்.

அதற்குபின்னர்  நடந்தவற்றை தலைவர் குறிப்பிடுகின்றார்,தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது அப்பொழுதுதான்புண்ணாலைக்கட்டுவன் போனால் பாதுகாப்பாக இருக்கலாம் என தகவல் வந்தது. தகவல் கிடைத்ததும் நான் ஐயர் ,பற்குணம் ,நாராயணன் ராகவன், 5பேரும் எமது உறுப்பினரான புண்ணாவைக்கட்டுவனைச்சேந்த குலம் என்பவரின் வீட்டிற்குச் சென்றோம்.அவரிடம் தங்குமிட வசதி கிடைத்தது . ஆனால் உணவிற்கு பெரும் கஷ்ரமாகயிருந்தது, ஏனெனில் அவர் ஒரு ஐயர் ஒரு வறுமையான குடும்பம் என்பது எமக்கு தெரியும்அதனால் இந்தத் திட்டத்தை அங்கு இருந்து தான் போட்டோம்,

அடுத்து புத்தூர் வங்கி கொள்ளை எப்படி செய்தார்கள் என பார்ப்போம்

தொடரும்

Share:

1 thought on “a 643 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *