முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைமையக அலுவலகத்திற்கு முன்னால் பெப்ரவரி 08 ஆம் திகதி குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுஜீவ சேனசிங்க

அக்கட்சியின் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடும் வகையில், இந்த போராட்டம் சுஜீவ சேனசிங்க மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சரித் அபேசிங்கவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணிலுக்கு எதிராக கொழும்பில் நடைபெறவுள்ள பாரிய போராட்டம்! | Massive Protest In Colombo Against Ranil

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பது தொடர்பில் நடைபெறும் பேச்சுக்களுக்கு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக பரவும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ளார்.

அந்த பேச்சுக்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

Gallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *