சிரியாவின் (syria)வடக்கு மாகாணத்தில் கார் குண்டு தாக்குதலில் பெண்கள் உட்பட 20 விவசாய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (3) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாய தொழிலாளர்கள் இலக்கா..!
விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் பொருத்தப்பட்டிருந்த வெடி குண்டு வெடித்ததில் 19 பெண்கள் மற்றும் 1 ஆண் உயிரிழந்ததுடன் மேலும்,15 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

துருக்கியின் (turkey)ஆதரவில் இயங்கி வரும் சிரிய தேசிய இராணுவப் பிரிவுகள் மற்றும் அமெரிக்க(us) ஆதரவு குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அந்நாட்டின் உள்நாட்டுப் போர் முடிவு பெற்ற பின்னரும் தொடர்வதால் மன்பிஜ் நகரத்தில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.