ஒரு மிகப் பெரிய இன அழிப்புக்கான யுத்தம் ஆரம்பமாகிவிட்டிருந்த 2008ம் ஆண்டு காலப்பகுதியில் தனது உயிரைப் பணயம் வைத்தபடி ஈழம்வந்துசென்ற சகமானின் வரலாற்றுப் பயணம் மறுக்கப்பட்டவோ அல்லது மறைக்கப்படவோ கூடாது.

இந்த ஆதங்கத்தின் காரணமாகத்தான் பல போராளிகள் தாமாகவே முன்வந்து தமது சாட்சியங்களை ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்த போதுகளிலெல்லாம் தங்களுக்குக் காப்பரன்களாக நின்ற தாய்த் தமிழ் உறவுகளுக்கு உண்மை தெரியவேண்டும்- அந்த உண்மையை எப்படியாவது அவர்களுக்கு நாம் கூறிவிடவேண்டும் என்ற தவிப்பின் வெளிப்பாடுதான் அவர்களின் இந்தப் பதிவுகள்.

அந்தவகையில், சுவிட்சலாந்தில் வசித்துவருகின்ற ஒரு போராளி எம்மைத் தொடர்புகொண்டு, சீமானது வன்னி விஜயம் பற்றிய தனது சாட்சியை பகிந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய அந்தப் போராளி தெரிவித்த சில விடயங்களை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *