திருகோணமலை(trincomale) நகர் கடற்கரையில் இன்று(30) மாலை நீராடச்சென்றிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் திருகோணமலை சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20வயது இளைஞர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள்

நண்பர்கள் நால்வர் திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்றிருந்த நிலையில் ஒருவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற ஏனையோர் முயன்ற நிலையில் அவரை காப்பாற்ற முடியாது போனதாகவும் பின்னர் அனைவரையும் காவல்துறை உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழர் தலைநகரில் இன்று மாலை இடம்பெற்ற அனர்த்தம் | Young Man Swimming Trinco Beach Gone Missing

காணாமல் போன இளைஞரை தேடும் பணிகள் கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் போதிய வெளிச்சம் இன்மையால் தேடும் பணிகள் நாளை(31) காலை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *