இஸ்ரேலின்(Israel) பாதுகாப்பு அமைச்சரவை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளது.

 இந்தநிலையில், அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட அரசாங்கத்தின் வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் முதல் பணயக்கைதிகள் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலின்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) கூறியுள்ளார்.

எனினும் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தபட இன்னும் சில தடைகள் உள்ளன என்று ஜெருசலேமில்(Jerusalem) செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பணயக்கைதிகள் விடுதலை

இதற்கிடையில் காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்கின்றன, இதன்படி, புதன்கிழமை ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், 113 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகாரம்! | Israel Approves Ceasefire With Hamas

முன்னதாக 2023 ஒக்டோபர் 7ஆம் அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரை கொலை செய்து 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்து காசாவிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதல் காசா மீது பாரிய இஸ்ரேலிய தாக்குதலுக்கு காரணமானது. இதனையடுத்து இஸ்ரேலினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, 46,000இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸினால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *