அமெரிக்க(us) ஜனாதிபதி தேர்தலில் தான் இரண்டாவது முறையாக போட்டியிட்டு இருந்தால், டொனால்ட் டிரம்ப்பை(donald trump) தோற்கடித்து இருப்பேன், என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden)கூறியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்கினார். ஜனநாயக கட்சி சார்பில், முதலில் ஜோ பைடன் களத்தில் இருந்தார். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களினால் அவர் போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

அவருக்கு பதில் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் போட்டியிட்டார். ஆனால், இத்தேர்தலில் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். வரும் 20ம் திகதி அவர் பதவியேற்க உள்ளார்.

 டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன்

இந்தநிலையில் ஜனாதிபதி பைடன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், டிரம்ப்பை தோற்கடித்து இருப்பேன் என நம்புகிறேன். அதற்கான சிறந்த வாய்ப்பு என்னிடம் இருந்ததாக நினைக்கிறேன்.

ஆனால், 86 வயதாகும் நிலையில், மீண்டும் ஜனாதிபதி ஆக வேண்டும் என நான் விரும்பவில்லை. இதனால், போட்டியில் இருந்து ஒதுங்கினேன். 86 வயதாகும் நான், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என யாருக்கும் தெரியாது.

பைடன் முன்வைத்த கோரிக்கை பதிலளிக்காத ட்ரம்ப்

தேர்தல் வெற்றிக்கு பிறகு ஓவல் அலுவலகத்தில் என்னை சந்தித்த டிரம்ப்பிடம், அரசியல் எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டாம் என அவரிடம் கூறினேன். ஆனால், அதற்கு டிரம்ப் எந்த பதிலும் கூறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ட்ரம்பை தோற்கடித்திருப்பேன் : பைடன் வெளியிட்ட அறிவிப்பு | Biden R He Could Have Defeated Donald Trump
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *