கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணியானது, இன்று (24-12-2024) இடம்பெற்றுள்ளதுடன்,  ஜனாதிபதிக்கான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

மதுபான சாலை

இப்போராட்டத்தின் போது, “அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி | Protest Rally Demanding Closure Of Liquor Shops

குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள் மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *