கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ட்ரம்ப், அண்மைய நாட்களாக கனடாவின் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றார்.
கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்பட வேண்டுமென அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்கா – கனடா உறவில் விரிசல்
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வது சிறந்த யோசனையாக அமையும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு பெருந்தொகையில் மானியங்கள் வழங்கப்பட வேண்டிய எந்தவொரு அவசியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றினால் கனேடியர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் பாரியளவு இராணுவ பாதுகாப்பும் கிடைக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமொன்றில் வெளியிட்ட கருத்து காரணமாக அமெரிக்கா – கனடா உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.