இங்கிலாந்நில் உள்ள கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்துக்கான ஆராய்ச்சியில் 2007 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம்.அந்த ஆராய்ச்சியில் மக்கள் ஒரு நாட்டு விமான நிலையத்திலிருந்து மற்றுமொரு நாட்டின் விமான நிலையத்திற்கு செல்லும்போது அவர்களது பொதிகள் தவறவிடப்படும் அல்லது இழக்கப்படும்.அப்படி அந்த பொதிகள் இழக்கப்பட்டால் அவர்கள் நட்ஈட்டை கோர முடியும்.

இவ்வாறு பொதிகள் சேவைகள் தவறவிடப்படுவதால் வருடாந்தம் 400 மில்லியன் பவுண்ஸ் எயார் லைனால் செலுத்தப்படுகிறது.

எனவே எமது ஆராய்ச்சியில் இதற்கு தீர்வை எப்படி பெறலாம் என்பதுதான். அத்துடன் ஒரு முயற்சியில் இறங்கும் போது ஒருவருக்கு அது தொடர்பான தகுதி இருக்கவேண்டும்.தகுதி மட்டும் போதாது அந்த துறையில் ஈடுபடும்போது அது தொடர்பான வெறி ஏற்படவேண்டும் என்கிறார் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பரநாதன்.

தற்போது பிரித்தானியாவில் அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பிற்காக அந்நாட்டு அரசால் கௌரவிக்கப்பட்டு அவர் கண்டுபிடித்த துறைக்கு தனது பெயரை உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார் அவர்.

அவரால் இது எப்படி சாத்தியமானது. ஐபிசி தமிழுற்கு அளித்த நேரகாணலில் இதனை அவர் பகிர்ந்து கொள்கிறார். நீங்களும் காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்…

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *