ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது என்பதே எமது கொள்கை தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாவட்ட மக்கள் தெரிவு செய்துள்ளனர். என்னோடு இந்த தேர்தலில் வேட்பாளராக பயணித்த அனைத்து வேட்பாளருக்கும் நன்றிகள்.
மக்களின் நன்மை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநயக்காவின் கீழ் ஒன்று சேருகின்ற அரசாங்கம் தான் இந்த அரசாங்கம். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது போன்றவையே எமது அடிப்படை கொள்கைகள்.
இந்த கொள்கையின் அடிப்படையில் மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து எமது உறவுகளுக்கும் தோழர் தோழிகளுக்கும் தோழனாக தொடர்ந்து பயணிப்பேன்” என்றார்.