மத்திய கிழக்கின் பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேலை அதிர்ச்சியாக்கிய பிரான்ஸின் அறிவிப்பு
மத்தியகிழக்கில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள இஸ்ரேல் – ஹிஸ்புல்லா முறுகல் நிலைக்கு மத்தியில் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை முற்றாக தடை செய்வதாக இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை முற்றாக பிரான்ஸ் தடை செய்வதாக இன்று இடம்பெற்ற(05.10.2024) விசேட ஊடக சந்திப்பில் மக்ரோன் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகளை காசா மீதான குண்டுவீச்சு தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு உதவி புரிவதாக மனித உரிமைக் ஆணைக்குழுவால் விமர்சிக்கப்பட்டன.
பெரும் பின்னடைவு
இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பிரான்ஸின் அறிவிப்பானது இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம், பிரித்தானியா அரசாங்கம் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுத விநியோகத்தில் ஒரு பகுதியை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து கசப்பான விமர்சனங்களைக் வெளிக்கொண்டுவந்திருந்தது.
மேலும், கடந்த வாரம் இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களின் ஒப்புதலை ஜெர்மனி இடைநிறுத்தியது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேலும் தீவிரமான போரில் ஈடுபட்டுள்ள நிலையில்,மக்ரோனின் கருத்தானது இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களினால் கூறப்படுகிறது