பாகம் ஒன்றின் இரண்டாவது தொடர்
********************************

அப்பொழுது இந்தியாவில் இருந்து வந்து பல முஸ்லிம் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் பல கடைகளைக்கட்டி சிறந்த முறையில் வியாபாரங்களை செய்ததோடு மட்டும் அல்லாமல் இலங்கையுடைய பொருளாதாரத்தில் சிங்களவர்களை விட முஸ்லிங்களின் பொருளாதாரம் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் தங்களின் பொருளாதாரச் செல்வாக்கை வைத்து அப்பொழுது வெள்ளையர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள நீதிமன்றம் சென்று முஸ்லிங்கள் தங்களின் பள்ளிவாசலில் இருந்து நூறு மீற்றர் தூரம் வரை எந்தச் சிங்களவர்களும் சத்தம் போடக் கூடாது என நீதிமன்றம் ஊடாக அனுமதியை பெறக்கூடிய வல்லமைஅவர்களிற்கு இருந்தது.

பெரும்பாண்மையாக நாங்கள் இருக்கும் போது வியாபாரத்திற்காக வந்தவர்கள் எங்கட நாட்டில் நூறு மீற்றர் அருகில் சத்தம் போடக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? என்ற மனநிலை சிங்களவர்கள் மத்தியில் ஏற்பட்டது. 1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றிச் செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது; ஊர்வலத்தில் ஈடுபட்ட பௌத்தமத சிங்களவர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால்  இந்திய முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார ,ரீதியாகக் காணப்பட்ட போட்டியானது 

இந்தக் கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தபோதும்  சமயம் சம்பந்தமான இந்த முரண்பாடானது முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலுக்கு காரணமாயிற்று. இந்த வன்செயலினால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் ,அடித்து நொறுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வன்செயல் கொழும்பு, குருநாகல், போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது. இந்த நிலையைக் கண்டு ஆங்கில அரசு அச்சமடைந்தது. இந்த அச்சத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அப்போது முதலாம் உலக மகாயுத்தம் தீவிரமடைந்திருந்தது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்திருந்தது.இதனால் சிங்கள ,முஸ்லிம் குழப்பத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு விரோதமான சக்திகள் இருப்பதாக ஆளுநர் றொபட் தோமஸ் அச்சமும் ,ஐயமும் கொண்டார். இதனை அடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். ஏறக்குறைய நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை அடக்க இராணுவச் சட்டத்தை (மார்ஷல்லோ) பிரகடனப்படுத்தினார்.

 எவ்.ஆர். சேனநாயக்க அவரின் சகோதரர், டி.எஸ். சேனநாயக்க போன்ற பல சிங்களத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதுமட்டுமல்ல கலகத்தை அடக்க எடுத்த கடும் நடவடிக்கையினால் வில்லியம் பத்திரிஸ் உட்பட பல சிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.முஸ்லிம் சிங்கள இனமோதல் மூலம் அவர்களிடையே காணப்பட்ட உறவுகள் திருப்தியற்றனவாக மாறிக்கொண்டன. தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையானது சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களினாலும் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவானது. 

ஆனால், 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம், சிங்கள வன்முறையானது தாய்நாட்டவர்களுக்கிடையிலானதாக அமைந்த போதும் அதனை அடக்கியவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.எனவே, இலங்கையின் இன ரீதியான வன்முறையானது தமிழருக்கு எதிராக அல்லாமல் முதன் முதல் முஸ்லிம்களுக்கெதிராகவே நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள்சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராக இன்று மேற்கொள்ளும் இன வன்முறையின் முதற்படி 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்திக் காட்டப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இனி தமிழர் பிரச்சனைக்கு வருவோம்…..

25/07/1957 பண்டாசெல்வாஒப்பந்தம்  தமிழர் தந்தை செல்வநாயகத்துடன் பிரதமர் பண்டாரநாயக்கா நேரடியாகப் பேசினார்.

 சமரச உடன்பாட்டுக்கான இறுதிப் பேச்சுகள் 1957 ஜூலை 25 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின. அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு அதாவது இற்றைக்கு சரியாக 63 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 26 ஆம் திகதி இணக்கம் எட்டப்பட்டது.முழுமையானசமஷ்டி வடிவம் இல்லாவிட்டாலும் பிரதேச மன்றங்கள் ஊடாகத் தமிழருக்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரங்களை வழங்கவும், தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும், இணங்கித் தந்தை செல்வாவுடன் ஒப்பமிட்டார் பண்டா. ஆனால் அதன்பின் நடந்தது என்ன? தமிழருக்கு சற்றேனும் அதிகாரம் பகிரப்பட வாய்ப்பு ஏற்பட்டதைக் கண்டு சிங்களம் பொங்கிக் கொதித்து எழுந்தது. இனவாத சக்திகள் பேரெதிர்ப்புக்காக ஒன்று திரண்டன. ஜே. ஆர். ஜெய வர்த்தனா தலைமையில் மேற்படி ஒப்பந்தத்துக்கு எதிராக “கீர்த்தி மிக்க”கண்டியை நோக்கிய கால்நடை ஊர்வலம் நடத்தப்பட்டது. அதனால் தூண்டப்பட்டு, எழுச்சி பெற்ற சிங்களப் பேரினவாதம் 1958, ஏப்ரல் 9 ஆம் திகதி பிரதமர் பண்டார நாயக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டது.

சுமார் இருநூறு பிக்குகள் உட்பட ஐநூறு இனவெறி ஆதரவாளர்களைக் கொண்ட அந்தப் பேரணி பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிரதியை சவப் பெட்டி ஒன்றில் வைத்து இறுதி ஊர்வலமாக பண்டாவின் இல்லம்வரை கொண்டு சென்றது. அங்கு வைத்து சவப்பெட்டித்தகனத்தை உணர்ச்சி ஆரவாரத்தோடு அதுநிறைவேற்றியது.ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை.ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனால்தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். (1958 .4.9)ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்துஎட்டுஏப்ரல்ஒன்பதாம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரிப் பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டு அந்தப் பேரினவாதக் காட்டுக்கூச்சலுக்கு அடிமையாகிஅடிபணிந்தபிரதமர் பண்டாரநாயக்காஅந்தக் கூட்டத்தின் முன்னால் வந்து நின்று பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஒரு பிரதியைக் கிழித்தெறிந்து ஒப்பந்தம் செத்துவிட்டது எனப் பிரகடனம் செய்தார்.

சிங்களத் தலைமை அன்று புரிந்த இந்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமே இத்தீவில் இன ஒருமைப்பாட்டுக்கும்; தேசிய நல்லிணக்கத்துக்கும்; நிரந்தரமாகவே சாவுமணி அடித்தது. தமிழர் தேசம், சிங்களவர் தேசம் ஆகியவற்றுக்கு இடையே நிரந்தரப் பகை உண்டாக அதுவேகாரணமாயிற்று1925, 26 களில் இளம் அரசியல்வாதியாக பொதுவாழ்க்கைக்குள் நுழைந்த சமயம் இலங்கையில் சமரசம் பேணப்படுவதற்கு சமஷ்டியே உகந்த உயர்ந்த வழிமுறை எனத் துணிந்தும் வலுவாகவும் குரல் எழுப்பிய பண்டா முப்பது ஆண்டுகள் கழித்துத் தாம் ஆட்சித் தலைவராக வந்தபோது பௌத்த சிங்களப் பேரினவாத மாயையின் பிடிக்குள் முற்றாகச் சிக்குண்டு  அதற்கு சரணாகதி அடைந்து,  தாம் வலியுறுத்திய சமஷ்டிக் கோட்பாட்டைத் தாமே நிராகரித்தார்.

ஆட்சியைப் பிடிப்பதற்கு வசதியாக இனவாதத்தை அப்போது அவர் கையிலெடுத்தார்.நாடு முழுவதிலும் சிங்களம் மட்டுமே அரச மொழி என்ற சட்டத்தை 24 மணி நேரத்தில் கொண்டுவருவேன்…! என்ற அவரது பேரினவாதக் கூச்சல் தென்னிலங்கையில் நன்கு எடுபட்டது. 1956 தேர்தலில் அவரது தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அதனால் தெற்கில் வெற்றிவாகை சூடியது. அத்தேர்தலில் தென்னிலங்கை ஒருபுறமாகவும்;வடக்கு கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழர் தாயகம் மறுபுறமாகவும்; இனமுரண்பாட்டு அடிப்படையில் துருவமயப்பட  தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலுக்குக் குரல் எழுப்பிய தமிழரசுக்கட்சி பெரு வெற்றியீட்டியது.

தமிழ் மக்களின் தன்னாட்சி சமஷ்டி வடிவக் கோரிக்கைக்கு 1956 பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் தெளிவான ஆணை கிடைத்ததால் வீறுகொண்ட தமிழரசுக்கட்சி அதற்காகத் தனது சத்தியாக்கிரகப் போராட்டங்களையும்; சட்டமறுப்பு இயக்கங்களையும்; தீவிரப்படுத்தத்தீர்மானித்தது.இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மையோர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமாகும்.

அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழியையும் புறக்கணித்தது சிங்கள அரசு.இதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அது மட்டும் அல்ல ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சில தமிழர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் ஆடைகள் முற்றாக களையப்பட்டு சித்திரவதை செய்து புறந்தமேனியோடு அவர்களைக் கலைத்தனர்; சிங்களக்காடையர்கள் சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களுக்கும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுக்கொண்டது.

1958 இனக்கலவரம்தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர். இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது. 

இது நடந்துகொண்டுயிருக்க தமிழ் இளைஞர்கள் மத்தியில் உணர்வும் உறுதியும் மேலோங்கியது அவ் அடிப்படையில்தான் முதல் வழிகாட்டியும்
தமிழீழப் போராட்டத்திற்குஆரம்பவழிகாட்டியுமாகத் திகழ்ந்தவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன்  ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார்.

தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம்அதீதமாகக் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவனுள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.இவர் தனது தாயிடம் சென்று ?”ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது? ” என்ற அவரது வினாவிற்கு  பதில் அம்மாவிடம் கிடைத்ததும் சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பி அடித்தால் என்ன?? என்று கேட்டானாம்.

இயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் “தினப் புழுகு” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர் சிவகுமாரன் பி.எஸ்.கே என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவுகடந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழக்கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும் என்கிற பாகுபாட்டுத் தரப்படுத்தல் நடைமுறையானது. இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயத்தின் வெளிப்பாட்டின் அமைவாக”தமிழ் மாணவர் பேரவை”அமைப்பு உருவாக்கம் பெற்றது. 

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது.

 இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றான்.சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும் தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.

அந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை “தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி”என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும், ஈகமும் மிக்க சிவகுமாரன் “அப்பா நான் எங்கும் போகமாட்டேன் இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்”.என் உடலில் உயிர் இருக்கும் வரை ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினான். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம்”அம்மா… !உள்ள உயிர் ஒன்றுதான்; அது போகப் போவதும் ஒரு தடவைதான்; அப்படிப் போகும் இந்த உயிரை ;ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு?” இதுவே அவரது உறுதி நிலைப் பாடாகவும் இருந்தது.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிஸாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும், மங்கையர்களையும், மழலைகளையும் ,வெளிநாட்டுப் பேராதளவார்களையும், காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர், தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான்.

 அக்காலப்பகுதியில் சிங்களக்காடையர்களால் போராட்ட எழுச்சி ரீதியாக திரண்ட மக்களை இலக்கு வைத்துபொலிஸ் அதிகாரி சந்திரசேகரா தலைமையில் அவரின் கட்டளையில் யாழ்ப்பாணத்தில் கரண்ட் போஸ் மரம் சிங்கள பொலிசாரால் திட்டமிட்டு விழுத்தப்படுகின்றது.அது சன நெரிசலிற்கு மேல் விழுகின்றது. 10 உயிர் கரண்ட் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் எவரும் அவர்களிற்குக் கிட்ட செல்ல முடியாது காரணம் கரண்ட் அடித்து விடும் இதுதான் அன்றய அந்தத் துயரமானசம்பவம் .

அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்  கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின்கம்ப கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் அதனை வார்த்தைகள் கொண்டு விபரிக்க முடியாது இருந்தது.அகப்பட்ட தமிழர்களில் சிறுவன் ஒருவன் தியாகி பொன் சிவகுமாரனைப் பார்த்து “அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ…! நான் சாகப் போகின்றேன்”என்று அவலக் குரல் எழுப்பினான். ஆனால் இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்து தூக்கப் போக அவனது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத் தடுத்துவிட்டனர்.

அவன் கண்முன்னே தமிழீழத்தின் குருத்தொன்று மரமாகி ,காயாகி, கனியாகி, விதையாக முன்பே கருகி விடுகின்றது.தமிழினப் படுகொலைக்குக் காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லுவதற்கு சிவகுமாரன் பல முறைமுயற்சி எடுத்தான். இது வெளியே தெரியவந்தது.அதனால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் தருவதாக சிங்களம் விலை கணித்தது. தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரனை சிங்களக் கைக்கூலியும், பெற்றோல் நிலைய அதிபருமான,நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான்.

எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை உட்கொண்டு வீரச்சாவு அடைந்தாரன் அந்த மாவீரன். அவரின் வழிகாட்டலையே 30 வருடம் நடந்த ஆயுதப் போராட்டத்தில் அவ்மரபை தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள்,இதுவும் அவன் தயாள குணத்தாலேயே ஈகச் சாவடைந்தான். இறுதிக்கணத்தில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது …”அம்மா, என்னைப் பிடிக்க வந்த காவற்படை அதிகாரி நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னை ஒன்றும் செய்துவிடாதே எனக் கெஞ்சினான்  அதனால் நான் அவனைஒன்றும் செய்யவில்லை என்றான்”

அந்த இரக்க கொடையாளன்சிவகுமாரன்.கடைசி நேரத்தில் இவனிற்கு தாகம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க முற்பட்ட போது அதைக்கூடஇரக்கமற்ற சிங்களக் காவற்படை அனுமதிக்கவில்லை.தியாகி பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமுதாயம் தாயகம் மீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆக்கபூர்வமாய்க் குதித்தது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தான் அந்த மாவீரன் சிவகுமாரன். வீட்டை விட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாத சமூகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவிகளும், இளைஞர்களும், தியாகி பொன். சிவகுமாரனின் இறுதி நிகழ்வில் திரண்டனர்.தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஜுன் 5ற்கு மறுநாள் ஜுன் 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.இதன் அடுத்த கட்டப்பாய்ச்சலாக அனைத்து தமிழ் புத்திஜீவிகளும் சிங்கள வெறியர்களிற்கு என்ன செய்யலாம் எனசிந்திக்கத் தொடங்கினார்கள்

தொடரும்

Share:

1 thought on “a 618 பாகம் 01ஆரம்பப் பிரச்சனைகளும் மற்றும் 1970 தொடக்கம்1980 வரையான வரலாறுக்கதைகள் உள்ளடக்கம்,”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *